சீருடையில் மலம் கழித்ததால் 2ஆம் வகுப்பு மாணவன் மீது சூடான தண்ணீரை ஊற்றியுள்ளார் ஆசிரியர் ஒருவர்.
கர்நாடகாவில் இரண்டாம் வகுப்பு மாணவன் மீது வெந்நீரை ஊற்றியுள்ளார் பள்ளி ஆசிரியர். இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 40 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான் சிறுவன்
கடந்த வெள்ளி கிழமையன்று இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது சீருடையில் மலம் கழித்தகாக கூறப்படுகிறது. இதனால் எரிச்சலடைந்த பள்ளி ஆசிரியர் குழந்தையின் சீருடை மீது தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறார். ஆனால், அவர் திறந்துவிட்டது வெந்நீர் குழாயை.
சூடான தண்ணீர் மேலே பட்டதால் வலி, மற்றும் எரிச்சலால் துடிதுடித்துள்ளான் சிறுவன். 40% காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இந்நிலையில், கொடூர செயலில் ஈடுபட்ட ஆசிரியர், இந்த சம்பவத்திற்கு பின்னர் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டதாகவும், தலைமறைவாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும், அவர் மீது சிறுவனின் பெற்றோர் புகார் அளிக்கக் கூடாது என உள்ளூரில் இருக்கும் சில முக்கிய புள்ளிகள் தொலைப்பேசியின் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சிறுவனின் நிலை சற்று மோசமாக உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் வந்து புகார் கொடுக்காத வரை எந்த நடவடிக்கை எடுக்க இயலாது என காவல்துறை கைவிரித்து விட்டது.
இதற்கிடையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அதிகாரிகள் சிறுவனை மருத்துவமனையில் சென்று பார்த்தனர். இந்த விஷயத்தை விசாரிக்க அதிகாரிகள் தாமாக முன்வந்து ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கர்நாடகாவில் மாணவிகள் இருவர் வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் அவர்களை தாக்கிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. .
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust