அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் ராகிங் கொடுமைக்கு உள்ளாகும் வீடியோ இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் எடுக்கப்பட்ட வீடியோவில் ஜூனியர் மாணவர்கள் பலர் தலை குனிந்தபடி நிற்கிறார்கள்.
அப்போது அங்கு வரும் சீனியர் மாணவர்கள் புதிதாக வந்த ஜூனியர் மாணவர்களை நிற்க வைத்து கன்னத்தில் அறைகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கல்லூரியின் தலைமை மருத்துவர் ஜிதேந்திர குமார் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில் ராகிங் செய்த மாணவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் அரசு மருத்துவக் கல்லூரியின் சீனியர் மாணவர்கள் ஜூனியர்களை ராகிங் செய்ததாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியின் ஒழுங்குமுறைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சம்பவம் போல மத்தியப் பிரதேசம், இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் சீனியர் மருத்துவ மாணவர்கள் , ஜூனியர் மாணவர்களை மோசமாக ராகிங் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust