Morning News Wrap : "பஞ்சாப் தீவிரவாதத்தின் மையம்" - கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து

வாசகர்கள் நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய இன்றைய முக்கிய செய்திகள் இங்கு எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளது.
கங்கனா

கங்கனா

Twitter

Published on

பஞ்சாப் தீவிரவாதத்தின் மையம் - கங்கனா ரனாவத் சர்ச்சை

சில நாட்களுக்கு முன் பஞ்சாபில் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகச் சென்றிருந்த மோடி விவசாயிகள் போராட்டம் காரணமாகப் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. இது தொடர்பாகக் குடியரசு தகைவரை நேரில் சந்தித்துப் பேசினார் மோடி.

இப்போது இந்த விவகாரத்தில் பாலிவுட் நடிகை கங்கான ரனாவத் தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிற கருத்து சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

“பஞ்சாபில் நடந்தது அவமானம், பிரதமர் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர். அவர் மீதான தாக்குதல் மக்களின் மீதான தாக்குதல் ஒவ்வொரு இந்தியர்கள் மீதான தாக்குதலும் கூட. பஞ்சாப் தீவிரவாதத்தின் மையமாக மாறிக்கொண்டிருக்கிறது. இப்போது இதனைத் தடுத்து நிறுத்தாவிட்டால் பின்னாட்களில் அதிக விலை கொடுக்க நேரிடும்” என அவர் பதிவிட்டிருந்தார். ஏற்கெனவே டெல்லியில் விவசாயிகள் போராடும் போது அவர்களைத் தீவிரவாதிகள் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள்

மீனவர்கள்

Facebook

இலங்கை சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்வர் கடிதம்

கடந்த டிசம்பர் மாதம் 19,20 தேதி முதல் இலங்கை சிறையில் தவிக்கும் 56 மீனவர்களையும் அவர்களின் 75 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இலங்கை சிறையிலிருந்து 12 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், பொங்கல் விழாவை முன்னிட்டு இலங்கையில் வாடும் 56 மீனவர்களையும் அவர்களின் முக்கிய வாழ்வாதாரமான 75 படகுகளையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அவர்களின் குடும்பத்துடன் இணைவதை உறுதி செய்ய, இலங்கை அரசுடன் உயர்நிலை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இசைவாணி

இசைவாணி

Twitter

முன்னாள் கணவர் மீது கானா பாடகி இசைவாணி - புகார்

கானா பாடல்கள், இசை நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் மற்றும் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் பிரபலமானவர் இசைவாணி, இவர் கடந்த 2019-ம் ஆண்டு சதீஷ் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். அதன் பின் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துள்ளனர். தற்போது முன்னாள் கணவர் இசைவாணியின் செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவரை தன் மனைவி எனக்கூறியும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சமூக ஊடகங்களிலும் இசைவாணியின் கணவர் எனக் கூறிப் பல கணக்குகளை வைத்துக்கொண்டு அதன் மூலமும் கச்சேரி புக் செய்து வருகிறார் சதீஷ். இது குறித்து அவரிடம் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் முகத்தில் ஆசிட் அடித்து விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். இதனால் கோபமடைந்த இசைவாணி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பாங்காங் பாலம்

பாங்காங் பாலம்

Facebook

லடாக்கில் சீனா பாலம் - இந்தியா எதிர்ப்பு

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியில் சீனா பாலம் கட்டி வருகிறது. பாங்காங் ஏரியின் 40% பகுதி இந்தியாவிடமும் 50% பகுதி சீனாவிடமும் உள்ளது. 10% பகுதி சர்ச்சைக்குறிதாகவே இருக்கிறது. இந்நிலையில் சீன எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் சீனா புதிய பாலத்தைக் கட்டுகிறது. இதன் செயற்கைக் கோள் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.

இதனை குறிப்பிட்டு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம், “கடந்த 60 ஆண்டுகளாகச் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதியில் தான் சீனா பாலத்தைக் கட்டுகிறது. மத்திய அரசு இதனை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது” எனக் கூறியிருந்தது. இதனைக் கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி, “இந்திய எல்லையில் நடைபெறும் நிகழ்வு நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய பின்னடைவு, இப்போதாவது வாயைத் திறப்பாரா பிரதமர்?” என ட்விட் செய்தார். லடாக் பாலத்தைக் குறிப்பிடாமல் சமீபத்தில் பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர், “சீனாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுமானங்களை அமைப்பது சீன இறையாண்மைக்குட்பட்டது” என கூறியுள்ளார்.

Poster

Poster

Facebook

இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே வரக்கூடாது - வாரணாசியில் சர்ச்சை

ஆன்மிக தலை நகரமாக விளங்கும் வாரணாசி கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளதால் சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. இங்கு பழம்பெரும் கோவில்கள் பல இருக்கின்றன. இங்குப் பல வெளிநாட்டுப் பணிகளும் சுற்றுலாப் பயணிகளும் வருவது வழக்கம்.

இந்நிலையில் இந்து அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷித் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் ஒட்டியதாகக் கூறப்படும் போஸ்டரில், “இது ஒரு பிக்னிக் ஸ்பாட் அல்ல, சனாதன கலாச்சாரத்தின் சின்னம். இந்துக்கள் அல்லாதவர்கள், மலைக் கோவில் மற்றும் பிற கோவில்களுக்கு வரக்கூடாது. “இது வேண்டுகோள் இல்லை, எச்சரிக்கை”” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் இந்து அல்லாதவர்கள் மீதான வெறுப்பைக் காட்டுவதாகப் பல தரப்பினர் இதனை எதிர்த்து வருகின்றனர்.

கங்கனா

Omicron : கொரோனா தொற்று தோன்றிய சீனாவின் நிலை இப்போது என்ன?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com