இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் கொண்டாடப்படும் ராமாயணம் - எங்கே தெரியுமா?

ராமாயணம் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. அந்த நாடுகள் குறித்து இந்த பதவில் தற்போது பார்க்கலாம்.
Countries other than India that celebrate Ramayana
Countries other than India that celebrate Ramayana Twitter

இந்து மதத்தின் முக்கிய இதிகாசமான ராமாயணத்தை மக்கள் மரியாதைக்குரிய ஒன்றாக கருதுகின்றனர். வட இந்தியாவில் இராவண வதம் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ராமாயணம் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. அந்த நாடுகள் குறித்து இந்த பதவில் தற்போது பார்க்கலாம்.

தாய்லாந்து

தாய்லாந்தில் ராமாயணத்தை ராமாகியன் என கூறுகின்றனர். ராமாகியன் தாய்லாந்தின் தேசிய காவியங்களில் ஒன்றாகும். மேலும் இது ராமாயணத்தின் மற்றொரு பதிப்பு மற்றும் கொண்டாட்டமாகும். இந்த பதிப்பில் ராவணனின் பாத்திரம் தோசகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறது. இந்த கதை 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

மியான்மர்

மியான்மரில் ராமாயணத்தை யம ஜடாவ் அல்லது யமயானம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இது வெறும் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பாக இல்லாமல், பழம்பெரும் காவியத்தின் தனித்துவமான தழுவலாக உள்ளது.

இந்தியாவின் ராம்லீலாவைப் போலவே, யமா ஜடாவும் ஒரு நாடகத் தழுவலாகும். இது பொதுவாக மத விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது. இது நாட்டுப்புறவியல் மற்றும் பௌத்தத்தின் கூறுகளையும் கொண்டுள்ளது. இதன் அசல் இந்திய பதிப்பிலிருந்து வேறுபட்டதாக உள்ளது.

கம்போடியா

ராமாயணத்தை போல உள்ள கதை கம்போடியாவில் ரீம்கர் என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய காவியத்தின் மற்றொரு பிராந்திய பதிப்பாகும். இது பௌத்த மதத்தின் சுவாரஸ்யமான பதிப்பாக அமைகிறது.

அதே சமயம் இந்திய ராமாயணத்தைப் போலவே இந்தக் கதையும் ராமர், சீதை மற்றும் ராவணனை மையமாகக் கொண்டது. முக்கிய வேறுபாடு என்னவென்றால், கதாபாத்திரங்கள் மனிதர்களாகக் கருதப்படுகின்றன. இந்திய இதிகாசங்களைப் போல கடவுள்களின் அவதாரங்களாகக் குறிப்பிடப்படவில்லை

Countries other than India that celebrate Ramayana
கம்போடியா முதல் தாய்லாந்து வரை: ரூ.50 ஆயிரம் போதும், இந்த 9 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!

இந்தோனேசியா

இந்தோனேசியாவில் காகவின் ராமாயணம் என்பது இந்திய ராமாயணத்தின் தழுவலாக உள்ளது. இது 8-9 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவிற்கு வந்ததாக நம்பப்படுகிறது. இது பழைய ஜாவானீஸ் மொழியில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

ராமர், சீதை, லக்ஷ்மணன் மற்றும் அனுமன் ஆகியோரின் முக்கிய கதாபாத்திரங்களைத் தவிர, இந்தோனேசியா பதிப்பில் பல பூர்வீக தெய்வங்களும் உள்ளன. இந்தோனேசியாவின் புகழ்பெற்ற கேகாக் நடனம் ராமாயணத்தின் காட்சிகளையும் உள்ளடக்கியது.

Countries other than India that celebrate Ramayana
Travel: இந்தியா முதல் இலங்கை வரை - உலகின் பிரபலமான குகை கோவில்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com