Travel: இந்தியா முதல் இலங்கை வரை - உலகின் பிரபலமான குகை கோவில்கள்

உலகின் பல்வேறு நாடுகளில் குகைகளுக்குள் மறைதிருக்கும் கோவில்கள், ஆன்மீக தலங்கள் பற்றிய தொகுப்பு தான் இது
Travel: இந்தியா முதல் இலங்கை வரை - உலகின் பிரபலமான குகை கோவில்கள்
Travel: இந்தியா முதல் இலங்கை வரை - உலகின் பிரபலமான குகை கோவில்கள்twitter
Published on

உலகெங்கிலும் அட்வென்சரான சுற்றுலா தலங்கள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக காட்டுக்குள் மறைந்திருக்கும் கோவில்கள், மலைகளின் உச்சியில் அமைந்திருக்கும் கோவில்களுக்கு போவது என ஆன்மீக சுற்றுலா கூட கொஞ்சம் த்ரில்லிங்காக செய்பவர்கள் இருக்கின்றனர்.

நீங்கள் அந்த வகை என்றால் இந்த பதிவு உங்களுக்காக. உலகின் பல்வேறு நாடுகளில் குகைகளுக்குள் மறைதிருக்கும் கோவில்கள், ஆன்மீக தலங்கள் பற்றிய தொகுப்பு தான் இது

பாட்டு குகைகள், மலேசியா

இங்குள்ள குகை கோவில்கள் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. இங்குள்ள முருகன் சிலையின் உயரம் 42.7 அடி ஆகும். இது உலகின் மிக உயரமான முருகன் சிலைகளுள் ஒன்று.

மலாய் மொழியில் பாட்டு என்ற பாறை என்று பொருள். இந்த குகைகள் சுண்ணாம்பு கற்களால் ஆனவை

பிண்டயா குகைகள், மியான்மர்

இந்த குகை கோவில்கள் புத்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. பர்மாவின் மைலெட் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த மலை குகைகள். மொத்தம் இங்கு மூன்று குகைகள் உள்ளன.

மலையின் தெற்கு பகுதியில் உள்ள குகைகளுக்கு மட்டுமே மனிதர்கள் செல்லக்கூடிய இடமாக உள்ளது. இவை சுமார் 490 மீட்டர் நீள்கிறது மற்றும் 8000 புத்த சிலைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன

சடான் குகை, மியான்மர்

மியான்மரில் அமைந்திருக்கும் மற்றொரு குகை கோவில் பகுதி தான் இந்த சடான் குகை. உலகின் அழகான குகை கோவில்களுள் ஒன்றாக கருதப்படும் இந்த பகுதிக்கு நம்மால் நீர்வழிப் பயணம் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

கிழக்கிலிருந்து மேற்கில் 107 மீட்டர் நீளும் இந்த குகைக்குள் நூற்றுக்கணக்கான பௌத்த சிலைகள் உள்ளன. இதன் நுழைவு வாயில் சற்றே குறுகலாக இருக்கிறது

பதாமி குகைகள், இந்தியா

கர்நாடகாவின் பகல்கோட் பகுதியில் அமைந்திருக்கும் இந்த குகைகளில், இந்து மற்றும் ஜெயின் கோவில்களை நாம் காணலாம்.

இங்கு cave 3 என்றழைக்கப்படும் குகை தான் மிகவும் பெரிய குகை. இது இந்துக் கடவுள் மகாவிஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் நுணுக்கமான வேலைபாடுகளை கொண்டது

Travel: இந்தியா முதல் இலங்கை வரை - உலகின் பிரபலமான குகை கோவில்கள்
கர்நாடகா: கூர்க் முதல் பதாமி வரை - மழைக்காலத்தில் செல்வதற்கு சிறந்த இடங்கள்!

டம்புள்ளா குகைகள், இலங்கை

இலங்கையின் மிகப் பெரிய குகை கோவில்கள் இந்த டம்புள்ளா. இங்குள்ள சிலைகளும், ஓவியங்களும் முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.

இதனை டம்புள்ளா பொற்கோவில் என்று அழைக்கின்றனர்.

இதன் சுற்றுவட்டாரத்தில் கண்டறியப்பட்ட 80 குகைகளில் 5 குகைகள் பிரதானமானதாக அறியப்படுகிறது. இலங்கையில் பௌத்த மதம் பரவலாக பின்பற்றப்படுகிறது. இந்த குகைகளில் நாம் புத்த சிலைகள், ஓவியங்களை காணலாம்

Travel: இந்தியா முதல் இலங்கை வரை - உலகின் பிரபலமான குகை கோவில்கள்
Sri Lanka: இராவண குகை, அருவி; எழில் கொஞ்சும் இடங்கள் - இலங்கையில் எங்கிருக்கிறது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com