பூனேவில் சாலை நடுவே தனது காதலியை இறுகப்பிடித்துக்கொண்டு நின்ற நபரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் கட்டியணைத்துக்கொண்டு நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதலிக்கும்போது நாம் அர்த்தமற்ற பல வேலைகளை செய்வோம். நாமும் நமது காதலனோ/காதலியோ மட்டும் தான் நமக்கு உலகம். அவர்களை தவிர வேறு யாரும் கண்ணுக்கு தெரியமாட்டார்கள்.
இங்கும் அதை நிரூபிக்கிறது இந்த காதல் ஜோடியின் செயல்.
பூனேவில் முக்கியமான நான்கு வழிச்சாலையின் நடுவில் ஒரு ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்துக்கொண்டு நின்றிருக்கின்றனர். பீக் ஹவரில் பரபரப்பாக சென்றுக்கொண்டிருந்த வாகனங்களுக்கு நடுவில் இவர்கள் நின்றிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
எல்லோரும் அலுவலகங்களுக்கு, தங்களது வேலைகளுக்கு செல்லும் அவசரத்தில் இருக்க, இவர்கள் சுற்றியிருக்கும் உலகை மறந்து கட்டிப்பிடித்தவாறு நிற்கின்றனர். கொஞ்சம் கூட நகர்ந்து செல்ல இவர்கள் முயற்சிக்கவில்லை.
அங்கிருந்த போக்குவரத்து அதிகாரி அவர்களை பிரிக்க நினைத்தும், பொதுமக்கள் அவர்களை அப்புறப்படுத்துமாறு கூச்சலிட்டும் எந்த பயனும் இல்லை.
இவர்களால் போக்குவரத்து சற்று நேரம் ஸ்தம்பித்தது. சிறிது நேரம் கழித்து பொதுமக்கள் இவர்களை விலகச் சொல்வதை உணர்ந்து அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.
அப்போதும் கூட இவர்கள் இடையூறு விளைவித்த எந்த ஒரு உணர்வும் இல்லாமல் தோள் மீது கைப்போட்டுக்கொண்டு சென்றுவிட்டனர்.
இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust