ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பிரதமர் நரேந்திர மோடியுடன் பானி பூரி ருசித்து சாப்பிடும் புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை பெற்று வருகின்றன.
இந்தியர்களால் மிகவும் விரும்பப்படும் ஸ்ட்ரீட் ஃபுட்களில் முதன்மையாக இருப்பது பானி பூரி. சிறியவர் முதல் பெரியவர் வரை இதன் சுவைக்கு அடிமை. இந்தியா மட்டுமல்லாது, வெளிநாட்டவர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது இந்த உணவு வகை.
இந்நிலையில், இந்தியா வந்திருக்கும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பானி பூரி சாப்பிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். "எனது நண்பர் ஃபுமியோ கிஷிடா,
கோல் கப்பா ( பானிபூரி) உள்பட, இந்திய ஸ்நாக்களை விரும்பி சாப்பிட்டார்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. பானி பூரி தவிர மற்ற இந்திய சிற்றுண்டி வகைகளும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.
பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்காக நேற்று டெல்லி வந்தடைந்தார் ஜப்பான் பிரதமர் கிஷிடா.
இரு நாட்டு பிரதமர்களும் டெல்லியிலுள்ள புத்த ஜெயந்தி பூங்காவை பார்வையிட்டனர்.
ஜப்பான் பிரதமர் பானி பூரி சாப்பிடும் வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 26 ஆயிரம் லைக்குகள் 26.5 ஆயிரம் வீயூக்களையும் பெற்றுள்ளது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust