சிறுத்தையின் பிடியிலிருந்து தப்பிய இளைஞர் - வைரல் வீடியோ

சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞரை சிறுத்தை ஒன்று தாக்க முயன்ற பதைபதைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுத்தை (Rep)
சிறுத்தை (Rep)Twitter
Published on

அசாம் மாநிலத்தின் காசிரங்கா வனப்பகுதியில் உள்ள ஹல்திபரி விலங்குகள் நடைபாதையில் சாலை ஓரமாக இளைஞர் ஒருவர் சைக்கிள் ஓட்டி சென்று கொண்டிருக்கும் போது வனத்திற்குள்ளிருந்து திடீரென வந்த சிறுத்தை ஒன்று இளைஞரைத் தாக்க முயன்றது.

சிறுத்தை தாக்கியதில் நிலைதடுமாறி சைக்கிளில் இருந்து இளைஞர் விழுந்துவிட்டார். அவ்வழியே வந்த அடுத்தடுத்த வாகனங்களை கண்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சிறுத்தை புகுந்தது.

பதறிப்போன அந்த சைக்கிளில் வந்த இளைஞர் மீண்டும் வந்த பாதையிலேயே திரும்பிச் சென்றிருக்கிறார்.

சிறுத்தையின் பிடியிலிருந்து இளைஞர் அதிர்ஷ்டவசமாகத் தப்பினார். இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கேசவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சிறுத்தை
சிறுத்தைtwitter

இதனிடையே காசிரங்காவிலிருந்து கர்பி அங்லாங் வரையிலான பகுதிகளில் வனவிலங்குகள் உலவும் இடமாக இந்த நடைபாதை உள்ளதால் எந்த நேரத்திலும் பாதசாரிகள், பயணிகள் விலங்குகளைச் சந்திக்கும் அபாயம் ஏற்படும்.

ஆகவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என காசிரங்கா தேசிய பூங்காவின் DFO ரமேஷ் குமார் கோகோய் தெரிவித்திருந்தார்.

சிறுத்தை (Rep)
திமிங்கலத்தின் வாய்க்குள் சென்று உயிர் மீண்டவரின் திக்திக் நிமிடங்கள்! - விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com