The Mountain Man : இறந்த மனைவிக்காக 22 ஆண்டுகள் மலையை உடைத்த மனிதர் - ரியல் ஹீரோவின் கதை!

மனைவி மரணமடைந்ததால் விரக்தியில் இருந்த நபர் தன் குடும்பத்துக்கு வந்த நிலை இனி யாருக்கும் வரக் கூடாது என்று நினைத்தார். இதற்காக அவர் ஒரு மலையை இரண்டாக பிளந்தார் என்பதை நம்ப முடிகிறதா?
The Mountain Man : இறந்த மனைவிக்காக 22 ஆண்டுகள் மலையை உடைத்த மனிதர் - ரியல் ஹீரோவின் கதை!
The Mountain Man : இறந்த மனைவிக்காக 22 ஆண்டுகள் மலையை உடைத்த மனிதர் - ரியல் ஹீரோவின் கதை!Twitter

தனி ஒரு மனிதனாக ஒரு மலையை பிளந்த தஷ்ரத் மஞ்சி, மலை மனிதன் (Mountain Man) என்று அழைக்கப்படுகிறார். தனது விடாமுயற்சி மற்றும் மன உறுதிக்காக இன்று பிகார் முழுவதும் கொண்டாட்டப்படுகிறார்.

பீகாரின் கெளூர் கிராமத்தில் தாழ்ந்த சாதியாக கருதப்படும் வகுப்பில் பிறந்தவர் தான் தஷ்ரத் மஞ்சி.

1930களில் பிறந்த இவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, தினக்கூலியாக சுரங்கங்களில் வேலை செய்து வந்தார்.

திருமணத்துக்கு பிறகு கெளூர் கிராமத்தில் வசித்து வந்தார் மஞ்சி.

கெளூர் கிராமத்தில் போதுமான அடிப்படை வசதிகள் கிடையாது. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட அந்த ஊரில் இருந்து பக்கத்து நகரத்துக்கு போக வேண்டுமென்றால் கூட பல கிலோமீட்டர்கள் சுற்ற வேண்டும்.

மஞ்சியின் இயல்பான அழகான வாழ்க்கை 1959ம் ஆண்டு திடீரென உடைந்து போனது.

பெருஞ்சோகம்

தஷ்ரத் மஞ்சி மற்றும் அவரது மனைவி ஃபல்குனி தேவி தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்தது.

மனைவி மீண்டும் கருவுற்றதில், அடுத்த குழந்தைக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார் மஞ்சி.

ஆனால் ஒரு நாள் தண்ணீர் எடுக்கச்சென்ற ஃபல்குனி தேவி தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.

அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்செல்ல விரைந்தனர். ஆனால் மருத்துவமனை அந்த ஊரில் இருந்து 90 கி.மீ தொலைவில் இருந்தது.

மலையைச் சுற்றி அவரை அழைத்துச் சென்றனர். ஆனால் ஃபல்குனியின் உயிர் அவ்வளவு நேரம் தாக்குபிடிக்கவில்லை.

கர்ப்பிணி மனைவி தனது கண்முன்னே மரணிப்பதைக் காண வேண்டிய துரதிஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டார் தர்ஷத் மஞ்சி.

மனைவியின் மறைவு குறித்து அழுது புலம்பாமல் இனி அந்த ஊரில் இது போல யாருக்கும் நடக்காமல் இருக்க வேண்டுமென்று முடிவு செய்தார் மஞ்சி.

அதற்காக தான் கூலி வேலைக்கு பயன்படுத்தும் உளியையும் சுத்தியலையும் கையில் எடுத்தார்.

விடா முயற்சியும் மன உறுதியும்

மஞ்சி தனது ஊருக்கும் நகரத்துக்கும் நடுவில் இருந்த மலையை தனி மனிதனாக குடையத் தொடங்கினார்.

இந்த மலையின் குறுக்காக பாதை அமைந்திருந்தால் மனைவியின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்பதால் முழு மூச்சுடன் மலையை உடைத்தார்.

தினமும் வேலைக்கு சென்று வந்த பின்னர் மலையைக் குடையத் தொடங்கினார்.

பகல் முழுவதும் வேலை செய்த பின்னர், இரவில் மலையை உடைத்தார்.

ஊரே இவரை கேலி செய்தது. இவரால் மலையில் ஒரு பாதையை உருவாக்க முடியாது எனக் கூறினர்.

ஆனால் மஞ்சி மனம் தளராமல் தொடர்ந்து தனது பணியை மேற்கொண்டார்.

விடுமுறை நாட்களில் கூட மலையடிவாரத்திற்கு சென்று பாறைகளை நொருக்கினார்.

The Mountain Man : இறந்த மனைவிக்காக 22 ஆண்டுகள் மலையை உடைத்த மனிதர் - ரியல் ஹீரோவின் கதை!
Abdu Rozik : உலகிலேயே க்யூட்டான சிங்கர் - இணையத்தில் அதிகம் தேடப்படும் இவர் யார்?

தடை அதை உடை

தன்னலமில்லால் தொடங்கிய இந்த பணியை முழுவதுமாக முடிப்பதற்குள் பல சிக்கல்களை சந்தித்தார் மஞ்சி.

மஞ்சியின் தந்தை, அவர் குடும்பத்தைப் பார்க்காமல் தேவையற்ற விஷயத்தில் நேரத்தை செலவிடுவதாக திட்டினார்.

போலீஸ் அவரைக் கைது செய்வதாக மிரட்டினர்.

முக்கியமாக கடுமையான வறட்சி அவரது கிராமத்தைத் தாக்கியது.

இதனால் நகரத்துக்கு குடி பெயர்ந்தார். ஆனாலும் விடாமல் மலையை சிதைக்கும் வேலையை செய்துகொண்டே இருந்தார்.

மஞ்சியின் விடா முயற்சியைப் பார்த்த சில உள்ளூர்வாசிகளும் அவருக்கு உதவினர். வழக்கறிஞர்கள் அவருக்காக போலீஸிடம் வாதாடினர்.

The Mountain Man : இறந்த மனைவிக்காக 22 ஆண்டுகள் மலையை உடைத்த மனிதர் - ரியல் ஹீரோவின் கதை!
ஆயிரக்கணக்கான மனிதர்களை காத்த நாய் குட்டி - ஒரு சூப்பர் ஹீரோ கதை!

அங்கீகாரம்

22 ஆண்டுகள் தொடர்ந்து மலையை பிளந்த பிறகு 1982ல் அவர் தனது ஊருக்கும் நகரத்துக்கும் இடையில் பாதையை அமைத்து முடித்தார்.

மலைக்கு நடுவில் 360 அடி தூரத்துக்கு அந்த பாதை இருந்தது. இது அந்த கிராம மக்களின் வாழ்க்கையை மாற்றியது.

நகரத்துக்கு போக வேண்டிய தூரத்தை 3ல் ஒரு பங்காக குறைத்தது.

7.7 அடி அகலமான பாதை மிகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தது. அவரது செயலை பைத்தியக்காரத்தனம் எனக் கூறியவர்கள் அவரை வியந்துப் பார்த்தனர்.

அந்த ஊரில் கோமாளியாக பார்க்கப்பட்டவர் ஹீரோவாக மாறினார். அவரை தி மவுண்டைன் மேன் என்று அழைத்தனர்.

இவரது கதை 2015ம் ஆண்டு ஆவணப்படமாக எடுக்கப்பட்டது.

2006ம் ஆண்டு இவரை பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்தது பீகார் அரசு.

இவரது புகைப்படம் பதித்த அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது இந்திய அரசு.

இந்த அங்கீகாரங்கள் கிடைப்பதற்கு முன்னரே 2007ம் ஆண்டு மஞ்சி உடல்நலக் குறைவால் மறைந்தார்.

அவரது குழந்தைகள் இன்றும் அவரைப் போலவே வறுமையில் வாடுகின்றனர். அவரைப் போலவே மன உறுதியுடன்.

The Mountain Man என்பதை மலையைப் பிளந்தவர் என்பதை விட மலை போன்ற மன உறுதியுடையவர் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்!

The Mountain Man : இறந்த மனைவிக்காக 22 ஆண்டுகள் மலையை உடைத்த மனிதர் - ரியல் ஹீரோவின் கதை!
மான்சா மூசா : பில்கேட்ஸ், அமேசான் ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப்பெரிய பணக்கார தங்க அரசன் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com