பட்டர் சிக்கனை கண்டுபிடித்தது யார்? உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உணவகம்
பட்டர் சிக்கனை கண்டுபிடித்தது யார்? உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உணவகம்Twitter

பட்டர் சிக்கனை கண்டுபிடித்தது யார்? உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உணவகம்

பட்டர் சிக்கன் மற்றும் தால் மக்கானியை தாங்கள்தான் முதலில் கண்டுபிடித்ததாக கூறி பிரபல உணவகமான தர்யாகஞ்ச் மீது மோதி மஹால் என்ற உணவகம் வழக்கு தொடுத்ததையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுந்துள்ளது.
Published on

பட்டர் சிக்கன் மற்றும் தால் மக்கானி உணவுகளை கண்டுபிடித்தது யார் என்பதில் டெல்லியில் உள்ள 2 பிரபல உணவகங்களுக்கு இடையே பிரச்னை வெடித்து, அதற்கு தீர்வு காண உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

பட்டர் சிக்கன் மற்றும் தால் மக்கானியை கண்டுபிடித்தவர் யார்? இந்த இரண்டு புகழ்பெற்ற உணவுகளை தாங்கள்தான் முதலில் கண்டுபிடித்ததாக கூறி பிரபல உணவகமான தர்யாகஞ்ச் மீது மோதி மஹால் என்ற உணவகம் வழக்கு தொடுத்ததையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுந்துள்ளது.

மோதி மஹாலின் உரிமையாளர்கள், தங்களின் முன்னோடியான குண்டல் லால் குஜ்ரால் தான் பட்டர் சிக்கன் மற்றும் தால் மக்கானியைக் கண்டுபிடித்ததாகவும், தர்யாகஞ்ச் உணவகம் இந்த இரண்டு உணவுகளையும் கண்டுபிடித்தவர் என்று மக்களை ஏமாற்றி வருவதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

தர்யாகஞ்ச் உணவகங்களுக்கும் பழைய டெல்லியின் தர்யாகஞ்ச் சுற்றுவட்டாரத்தில் முதல் கிளை திறக்கப்பட்ட மோதி மஹாலுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறி தர்யாகஞ்ச் உணவகங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி சஞ்சீவ் நருலா, தர்யாகஞ்ச் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பினார். இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த வழக்கை மே 29ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

பட்டர் சிக்கனை கண்டுபிடித்தது யார்? உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உணவகம்
44 ஆண்டுகள் பழமையான மிதக்கும் உணவகம் கடலுக்குள் மூழ்கியது - எப்படி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com