JNU : பல்கலைக்கழக சுவர்களில் ஒரு சமூகத்தாருக்கு எதிரான வாசகங்கள் - என்ன நடக்கிறது அங்கே?

சுயசிந்தனை உள்ள ஆசிரியர்களை மிரட்டுவதற்காக கம்யூனிஸ்டுகள் இவ்வாறு எழுதியுள்ளதாக வலதுசாரி மணவ அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
JNU : பல்கலைக்கழக சுவர்களில் உயர் வகுப்பினருக்கு எதிரான வாசகங்கள் - என்ன நடக்கிறது அங்கே?
JNU : பல்கலைக்கழக சுவர்களில் உயர் வகுப்பினருக்கு எதிரான வாசகங்கள் - என்ன நடக்கிறது அங்கே?Twitter
Published on

டெல்லியில் உள்ள ஜவர்ஹலால் நேரு பல்கலைகழகத்தின் உட்புற சுவர்களில் உயர்வகுப்பினருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிகப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ள அந்த வாசகங்களில் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களுக்கு எந்த மாணவர் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரித்து பல்கலைக் கழகத்தின் வி.சி-யிடம் அறிக்கையை சமர்ப்பிக்க School of International Studies and Grievances Committee  தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜே.என்.யூ-வின் ஆர்.எஸ்.எஸ் சார்பு மாணவர் அமைப்பான ஏபிவிபி, "2014 முதல் பல்கலைகழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன. இவை நிறுத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல முறை அறிவுறுத்தியுள்ளோம். ஆனால் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை." எனக் கூறியதுடன் இதனை செய்தது இடதுசாரி அமைப்புகள் தான் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த வசனங்கள் ஆசிரியர்கள் அறைகளின் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுயசிந்தனை உள்ள ஆசிரியர்களை மிரட்டுவதற்காக கம்யூனிஸ்டுகள் இவ்வாறு எழுதியுள்ளதாக வலதுசாரி மணவ அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பல்கலைக்கழக சுவர்களில், பிராமணர்கள் மற்றும் பனியா சமூகத்தினருக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டிருக்கிறது.

JNU : பல்கலைக்கழக சுவர்களில் உயர் வகுப்பினருக்கு எதிரான வாசகங்கள் - என்ன நடக்கிறது அங்கே?
NDTV : ராஜினாமா செய்த ராய் தம்பதி - அதானி செய்த சூழ்ச்சிகள் என்ன? | Explained

ஜே.என்.யூ ஆசிரியர்கள் அமைப்பும் இது குறித்து கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இது மிகவும் வருத்தம் தரக் கூடியது என்றும் நாகரீகத்துடனும் பரஸ்பர மரியாதையுடனும் மணவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

JNU : பல்கலைக்கழக சுவர்களில் உயர் வகுப்பினருக்கு எதிரான வாசகங்கள் - என்ன நடக்கிறது அங்கே?
JNU violence: அசைவ உணவால் எழுந்த கலவரம்; ABVP - JNUSU மாணவர்களிடையே மோதல் - என்ன நடந்தது?

இடதுசாரி மாணவர் தலைவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். "நாங்கள் எங்களது முரண்பாடுகளை அரசியல் ரீதியாகவே எதிர்கொள்கிறோம். நாங்கள் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? இப்போது டெல்லி முனிசிபால் தேர்தலுக்காக நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். ஆனால் அதற்காக எந்த சுவரையும் நாங்கள் நாசம் செய்ய வில்லை. இந்த குற்றச்சாட்டுகள் எங்கள் மீது இட்டுகட்டப்பட்டுள்ளது" எனக் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியிருக்கிறது.

"ஒரு தரப்பை குறிவைத்து தாக்குவதை பல்கலைக்கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்" என ஜே.என்.யூ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த சம்பவத்தை முன்னிட்டு #Brahmin_Lives_Matter ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

JNU : பல்கலைக்கழக சுவர்களில் உயர் வகுப்பினருக்கு எதிரான வாசகங்கள் - என்ன நடக்கிறது அங்கே?
உத்தரபிரதேசம் : யோகி திறந்து வைக்கும் ரோலர்கோஸ்டர் பாலம் - உண்மை என்ன? | Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com