வெப் சீரீஸ் பார்க்க லீவு கேட்ட இளைஞர் - நெட்டிசன்ஸ் ரியாக்ஷன் என்ன?

அப்படித்தான், இங்கும் ஒரு பத்திரிகையாளர், ஒரு நாள் விடுமுறைக் கேட்டு தனது மேலதிகாரிகளுக்கு செய்தி அனுப்பியுள்ளார். அவர் கூறிய காரணம் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
வெப் சீரீஸ் பார்க்க லீவு கேட்ட இளைஞர் - நெட்டிசன்ஸ் ரியாக்ஷன் என்ன?
வெப் சீரீஸ் பார்க்க லீவு கேட்ட இளைஞர் - நெட்டிசன்ஸ் ரியாக்ஷன் என்ன?Twitter
Published on

தனக்கு மிகவும் பிடித்தமான வெப் சீரீஸை பார்க்கவெண்டும் என, ஒரு நாள் விடுப்பு கேட்டு தனது மேலதிகாரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் பத்திரிகையாளர் ஒருவர்.

வேலை வேலை வேலை என்று ஓடும் தலைமுறை இப்போது இல்லை. கூலிக்கு ஏத்த சோலி என்ற மைண்ட் செட் இப்போது பலருக்கும் வந்துவிட்டது. இதனால், லீவு கேட்கும் முறைகளும், காரணங்களும் கூட மாறி வருகின்றன.

அப்படித்தான், இங்கும் ஒரு பத்திரிகையாளர், ஒரு நாள் விடுமுறைக் கேட்டு தனது மேலதிகாரிகளுக்கு செய்தி அனுப்பியுள்ளார். அவர் கூறிய காரணம் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.

அபிஷேக் குமார் என்ற அந்த இளைஞர் தனது விடுமுறை விண்ணப்பத்தில், "டிசம்பர் 23 ஆம் தேதி, எனது வீட்டில் அமர்ந்து பிட்சர்ஸ் சீசன் 2 வெப் சீரீஸை பார்க்க விடுமுறைக் கேட்டு நான் அனுப்பும் ஃபார்மல் விண்ணப்பம் இது.

வாரம் முழுவதும், இரவு தூங்காமல் கண்விழித்து, எனது ஃபேவரைட் வெப் சீரிஸை நான் பார்க்க இயலாது என்ற காரணத்தினால், இந்த லீவு எனக்கு கண்டிப்பாக தேவை. மேலும் அதை பார்க்க என்னால் வார இறுதி வரையும் காத்திருக்கவும் இயலாது.

24 ஆம் தேதி முதல் எனது வேலையை நான் வழக்கம்போல தொடருவேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மெயிலை அவர் பிரதீக் மற்றும் மொஹம்மது என்கிற தனது மேலதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தார்.

வெப் சீரீஸ் பார்க்க லீவு கேட்ட இளைஞர் - நெட்டிசன்ஸ் ரியாக்ஷன் என்ன?
Bye Bye Sir : வைரலாகும் மூன்று வார்த்தை ராஜினாமா கடிதம் - என்ன, எங்கே, ஏன்?

தனது இந்த மெயிலை தானே ட்விட்டரில் பதிவிட்டிருந்த அபிஷேக் குமார், "விடுமுறை கேட்பதை இயல்பாக்குங்கள். உடல் நலக் குறைவு அல்லது, அவசர தேவை என்றால் மட்டுமே விடுமுறை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என தலைப்பிட்டிருந்தார்.

தன் ட்விட்டர் போஸ்ட்டிலும் மேலதிகாரிகளை அவர் டேக் செய்திருந்தார். இணையவாசிகள் பலரும், அபிஷேக் லீவு கேட்ட காரணத்தை பாராட்டியிருந்தனர். மேலும் ஒரு சிலர் விடுமுறை என்பது உங்கள் உரிமை, நீங்கள் காரணத்தை விளக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் தெரிவித்து வருகின்றனர்

வெப் சீரீஸ் பார்க்க லீவு கேட்ட இளைஞர் - நெட்டிசன்ஸ் ரியாக்ஷன் என்ன?
Meta, Twitter லே ஆஃப்: வேலை தருவதாக கூறிய Dream11 நிறுவனர் - நெட்டிசன்கள் ரியாக்ஷன் என்ன?
வெப் சீரீஸ் பார்க்க லீவு கேட்ட இளைஞர் - நெட்டிசன்ஸ் ரியாக்ஷன் என்ன?
"செல்லோ... நாளைக்கு லீவு" - கலெக்டருக்கு இன்ஸ்டாவில் ஐஸ் வைக்கும் 2கே கிட்ஸ்!

அபிஷேக் டெக் செய்திருந்த மேலதிகாரிகளில் ஒருவர் அவருக்கு விடுமுறை அளித்து ரிப்ளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com