ஒரு வேலைக்கு சேரும் போது இன்டர்வியூ என்ற பெயரில் விசாரணைக் கைதி போல உட்காரவைத்து கேள்விகள் கேட்பது நிறுவனங்களின் வழக்கம். அது ஒரு பக்கம் என்றால் வேலையை விட்டு விலகும் போது தண்டனைக் கைதி போல மற்றொரு விசாரணை.
இந்த இரண்டாவது விசாரணையிலிருந்து தப்பிக்கவும் தனக்கு பிடித்த அடுத்த வேலைக்கு செல்லவும் ஒருவர் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேலையிலிருந்து ராஜினாமா செய்வதற்காக அவர் எழுதிய கடிதம் தான் இணையத்தில் தீயாகப் பரவியது.
தினசரி வேலை சுழற்சியில் "என்ன வாழ்க்கடா இது" என மண்டை குழம்பிப் போகும் நாம் அனைவரும் மனதுக்குள் தினமும் ராஜினாமா கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறோம். அந்த கற்பனை கடிதத்தைக் கூட நாம் சில வரிகள் எழுதியிருப்போம் ஆனால் இவரோ வெறும் மூன்றே வார்த்தையில் தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்திருக்கிறார்.
இந்த கடிதத்துக்கு இணையத்தில் நெட்டிசன்கள் செய்துள்ள கமன்ட்களும் வைரலாகின்றன.
@MBSVUDU என்ற கணக்கிலிருந்து தான் முதன் முதலாக இந்த புகைப்படம் பதிவிடப்பட்டிருக்கிறது. அதில் அவர் சிம்பிள் என ஒரே வார்த்தையில் தலைப்பிட்டுள்ளார்.
இந்த ட்விட்டுக்கு 2 லட்சத்துக்கும் மேலாக லைக்குகளும், 50 ஆயிரத்துக்கும் மேலாக ரீட்விட்களும் பல கமன்ட்களும் வந்திருக்கின்றன.
உங்களுக்கு ஒரு வேலை பிடிக்கவில்லை என நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும். ஒரு வகையில் நெட்டிசன்களுக்கு இந்த புகைப்படம் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust