Amit Shah -வை சந்தித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்?
Amit Shah -வை சந்தித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்?Twitter

Amit Shah -வை சந்தித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்?

கிண்டியில் 20க்கும் மேற்பட்ட தமிழக பிரபலங்களை சந்தித்தார் அமித்ஷா.
Published on

பாஜக தலைவர் அமித் ஷா நேற்று இரவில் சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

கிண்டி நட்சத்திர ஹோட்டலில் தங்கிய அமித்ஷாவை பிரபலங்கள் சந்தித்தனர். பத்ம ஸ்ரீ விருதாளர் அனிதா பால்துறை, தொழிலதிபர்கள் நல்லி குப்பு சாமி, இந்தியா சிமெண்ட்ஸ் என்.ஸ்ரீநிவாசன், பி.எஸ்.ராஜன், வின் டிவி தேவநாதன், அப்பல்லோ மருத்துவமனை ப்ரீத்தா ரெட்டி, விஜயகுமார் ரெட்டி, வேல்ஸ் பல்கலைகழகம் ஐசரி கனேஷ் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் அமித் ஷாவை சந்தித்தனர்.

இன்று காலை 11:40 மணிக்கு பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார். 2024 தேர்தல் வியூகம் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமித் ஷா கட்சியின் நடவடிக்கைகள் குறித்து ஃபீட் பேக் கேட்டுத் தெரிந்துகொள்வார் எனக் கூறினார்.

மதியம் 1 மணி அளவில் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார் அமித் ஷா.

Amit Shah -வை சந்தித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்?
"நானே காண்ட்ராக்டர் எப்படி மது கடையை மூடுவேன்?" - பாஜக எம்.எ.ஏ சொன்ன பதிலால் அதிர்ச்சி!

மதியம் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மாலை மீண்டும் சென்னை வந்து சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் செல்கிறார்.

அமித் ஷாவை சந்திக்கும் பிரபலங்கள் பட்டியலில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆகியோரில் பெயர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Amit Shah -வை சந்தித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்?
ஜி.வி. பிரகாஷ் குமார் : 'இசை அசுரன்' ஜிவி இசையமைத்த இந்த பாடல்கள் உங்க Playlist ல இருக்கா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com