இந்தியாவில் இப்படியும் இடங்கள் இருக்கா? டெல்லியில் மறைக்கப்பட்ட பகுதிகள் பற்றி தெரியுமா?

இன்னும் சில இடங்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வரவில்லை. அப்படி டெல்லியில் இருக்கும் இந்த மறைவான இடங்கள் நகரத்தின் நெரிசலில் இருந்து விலகி அமைதியான வாரயிறுதியை விரும்புவோருக்கு ஏற்ற இடங்களாகும்.
Agrasen ki Baoli​
Agrasen ki Baoli​Canva
Published on

டெல்லி இந்தியாவின் தலைநகரம் என்பது அனைவரும் அறிந்ததே! டெல்லி அதன் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் மற்றும் கோவில்களுக்கு பிரபலமானது.

இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டினர்களும் தலைநகர் டெல்லியின் பல இடங்களை பார்வையிட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் சில இடங்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வரவில்லை.

அப்படி டெல்லியில் இருக்கும் இந்த மறைவான இடங்கள் நகரத்தின் நெரிசலில் இருந்து விலகி அமைதியான வாரயிறுதியை விரும்புவோருக்கு ஏற்ற இடங்களாகும்.

அக்ரசென் கி பாவ்லி

இது டெல்லியில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடமாகும். 103 படிகள் கொண்ட படிக்கட்டுக் கிணறு, கட்டிடக்கலையின் உச்சபட்ச அழகாகும்

டெல்லியின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த இடம் வணிகமயமாக்கலில் இருந்து இன்னும் விலகி இருக்கிறது.

சத்புலா பாலம்

இந்த பாலம் டெல்லியில் உள்ள சிறந்த மறைவான இடங்களில் ஒன்றாகும். இந்த பழமையான பாலம் துக்ளக் வம்சத்திற்கு சொந்தமானது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது நகரின் பழமையான இடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

Agrasen ki Baoli​
இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்களை FREE ஆக பார்க்கலாமா? என்னென்ன இடங்கள் தெரியுமா?

துக்ளகாபாத் கோட்டை

டெல்லியில் அதிகம் அறியப்படாத மற்றொரு இடம் துக்ளகாபாத் கோட்டை. இது பாழடைந்த கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

கியாசுத்-தின் துக்ளக் என்பவரால் கி.பி 1321-1325 இல் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. கோட்டையில் 13 நுழைவு வாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் சில அற்புதமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது.

பெரோஸ் ஷா கோட்லா கோட்டை

இந்த கோட்டை இன்று சிதிலமடைந்து இருந்தாலும் இந்தியாவின் புகழ்பெற்ற கடந்த கால வரலாற்றை இன்னும் சொல்கிறது.

நகர இரைச்சலுக்கு நடுவே அமைதி நிறைந்த பெரிய கோட்டை!

Agrasen ki Baoli​
மகாபலிபுரம் முதல் தரங்கம்பாடி வரை - சென்னையிலிருந்து செல்லக்கூடிய சூப்பர் Weekend Spots

அசோலா பாட்டி வனவிலங்கு சரணாலயம்

டெல்லியில் பலரும் அறியாத ஒரு வனவிலங்கு சரணாலயம் இருக்கிறது. 32.71 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வனவிலங்கு சரணாலயம் ஆரவல்லி மலைத்தொடரில் மறைந்திருக்கும் அழகு! இந்த சரணாலயம் டெல்லி, ஹரியானா மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ளது.

நார்த் ரிட்ஜ் பல்லுயிர் பூங்கா

டெல்லியில் உள்ள இந்த இடம் மறைவான மர்மமான இடமாக கருதப்படுகிறது. ஆனால் அந்த இடம் பார்க்க முற்றிலும் பசுமையாகவும், அழகாகவும் இருக்கிறது. இந்த இடம் கமலா நேரு ரிட்ஜ் என்றும் அழைக்கப்படுகிறது.

Agrasen ki Baoli​
இந்தியாவின் ’Scotland’ மடிக்கேரி டு ஏலகிரி: இந்த Hidden ஹில் ஸ்டேஷன்ஸ் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com