இந்தியாவின் ’Scotland’ மடிக்கேரி டு ஏலகிரி: இந்த Hidden ஹில் ஸ்டேஷன்ஸ் பற்றி தெரியுமா?
அடிக்கும் வெயிலுக்கு ஃப்ரிட்ஜுக்குள்ளேயே உட்கார்ந்துகொள்ளல்லாமா என்று இருக்கிறது. சம்மர் வெகேஷனும் சேர்ந்துகொண்டுள்ளதால், வீட்டில் இருப்பது கொஞ்சம் சிரமம் தான். எங்காவது குளிர் பிரதேசத்துக்கு சென்றுவரலாம் என்று தோன்றும்.
தென்னிந்தியாவில் அப்படி சென்று வர சில மலைவாசஸ்தலங்கள் உள்ளன. மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள தென்னிந்திய பகுதிகளில் சிலவற்றை இந்த கட்டுரையில் தொகுத்துள்ளோம். சம்மர் முடியத்தான் இன்னும் நாள் இருக்கிறதே? இந்த இடங்களுக்கு சென்றுவர மீதமிருக்கும் இந்த மே மாதம் போதும்.
டிரை செய்து பாருங்கள்!
குதுரமுகா, கர்நாடகா
குதுரமுகா என்ற வார்த்தை கன்னடத்தில் குதிரை முகம் என்று பொருள்படுகிறது. கர்நாடகாவில் அமைந்திருக்கும் இந்த சிகரமானது குதிரையின் முகத்தையொத்ததாக இருக்கும். இதனால் இந்த பெயர்.
சிக்மங்களூரில் அமைந்திருக்கும் இந்த மலைவாசஸ்தலமானது, கர்நாடகாவின் 3வது பெரிய சிகரமாகும். கர்நாடகாவின் பிரபலமான புகைப்பட ஸ்பாட்களில் ஒன்று இந்த குதுரமுகா. அழகிய மலைகள், நீர்வீழ்ச்சிகள், மற்றும் குதுரமுகா தேசிய பூங்கா போன்ற இடங்கள் உள்ளன.
பல அரிய வகை விலங்கினங்கள், தாவரங்களை இங்கு காணமுடியும் .
டிரெக்கிங் பிரியர்கள் இங்கு மலையேற்றம் செய்யலாம்
கோத்தகிரி, தமிழ்நாடு
ஊட்டியிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கோத்தகிரி. மணம் வீசும் தேயிலைத்தோட்டங்கள், தேயிலை தொழிற்சாலைகள் மலைச்சிகர வியூ பாயிண்ட்கள், பழமையான பங்களாக்கள் நிறைந்த இவ்விடம், அமைதியை நாடுபவர்களுக்கு சிறந்த ஸ்பாட். இங்கு மனிதர்கள் வாசமும் குறைவு தான்.
இங்கு கேத்தரின் நீர்வீழ்ச்சி, எல்க் நீர்வீழ்ச்சி, ரங்கசுவாமி தூண் மற்றும் தொட்டபெட்டா மலைத்தொடர் ஃபேமஸ்.
மடிக்கேரி, கர்நாடகா
மடிக்கேரி என்ற பெயரை வெகு சிலரே கேள்விப்பட்டிருக்கக் கூடும். கூர்க் அல்லது குடகு மலை என்று கூறினால் தெரியலாம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியானது கிழக்கே மைசூரு மேற்கே மங்களூரு நகரைக் கொண்டுள்ளது.
மடிக்கேரியை இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கின்றனர். இது ஒரு சிறந்த ஹனிமூன் ஸ்பாட்டும் கூட. இங்கு ஆரஞ்சு, காபி தோட்டங்கள் அமைந்துள்ளன.
மடிக்கேரி கோட்டை, புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயம், அபே நீர்வீழ்ச்சி மண்டல்பட்டி வியூபாயிண்ட் ஆகிய இடங்கள் இங்கு பிரபலம்.
அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திர பிரதேசம்
தமிழில் அரக்கு என்ற சொல்லுக்கு சிவப்பு என்று அர்த்தம். ஆனால் ஆந்திராவில் அமைந்திருக்கும் இந்த அரக்கு பள்ளத்தாக்கு பச்சை ஆடை போர்த்திய தேவதை.
இதுவும் அதன் காபி தோட்டங்களுக்கு பிரபலமான தளம். விசாகப்பட்டிணத்திலிருந்து சில மணி நேர தொலைவில் இருக்கும் இவ்விடத்தில் பனி சூழ்ந்த மலைகள், அழகிய நீர்வீழ்ச்சிகள், காபி தோட்டங்கள், பள்ளத்தாக்குகள், மழைக்காடுகள் இருக்கின்றன.
சாப்பாறை நீர்வீழ்ச்சி, அனதகிரி மலைகள், பத்மபுரம் தாவரவியல் பூங்காவை மிஸ் செய்திட வேண்டாம்.
ஏலகிரி, தமிழ்நாடு
வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டைக்கு இடையில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியானது டிரெக்கிங் செய்பவர்களுக்கு சிறந்த ஸ்பாட்.
இங்கு அரியவகை பாம்புகள், பறவைகள், விலங்குகளை காணலாம்.
இங்கு பிரபலமாக அறியப்படும் புங்கனூர் ஏரி, மனிதர்களால் உருவாக்கப்பட்டது. இங்கு படகு சவாரி செய்யலாம். இந்த ஏரியின் அருகே 12 ஏக்கர் பரப்பளவில் ஒரு இயற்கை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது பாறைகளால் நிறைந்த பூங்காவாகும்.
இவற்றை தவிர, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, சுவாமி மலை ஆகிய பகுதிகள் இங்கு மிகவும் பிரபலம் ஆகும்
இடுக்கி, கேரளா
”இவிடத்தே காத்தாணு காத்து, மலமூடும் மஞ்சாணு மஞ்சு கதிர் கானவெக்கும் மண்ணாணு மண்ணு” என்று பிரபல மலையால படமான மகேஷிண்டே பிரதிகாரம் என்ற படத்தில் வரும் முதல் பாடல். இது இடுக்கி நகரத்தை வர்ணிக்கும் விதமாக அமைந்திருக்கும்.
கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமான இங்கு தமிழர்களின் பாப்புலேஷன் கொஞ்சம் அதிகம். இடுக்கியின் பெரும்பகுதி காடுகளே
தேக்கடி, மூணாறு, இடுக்கி அணை இந்த மாவட்டதின் பிரபலமான சுற்றுலா தலங்கள். பெரியாறு பாயும் இடுக்கி மாவட்டத்திலேயே முல்லைப்பெரியாறு அணையும் உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust