2000 ரூபாய் நோட்டுகள் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டன? ஏன் திரும்பப் பெறப்படுகின்றன? - Explained
2000 ரூபாய் தாள்கள் திருப்பி பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் எனவும், வங்கிகளில் பணத்தை மாற்றிக்கொள்ளலாம் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள் எல்லாம் நமக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பணமதிப்பிழப்பு சம்பவத்தை நினைவுபடுத்தலாம். பணமதிப்பிழப்பைத் தொடர்ந்து தான் 2000 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது பொருளாதாரத்தின் நாணயத் தேவையை பூர்த்தி செய்வதற்காக ரிசர்வ் வங்கி சட்டம் 24 (1)-ன் படி 2000 ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டன. 1934ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டப்படி 10,000 ரூபாய்க்கு மிகாமல் பணத்தை அச்சிட்டுக்கொள்ளும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு உள்ளது.
நாணயத் தேவையைப் பூர்த்தி செய்த பின்னர் பிற வகையில் போதுமான நாணயங்கள் கிடைத்தபோது 2018-19ல் 2000 ரூபாய் தாள்கள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டது.
எத்தனை 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளன?
இதனால் குறைந்த அளவு 2000 ரூபாய் நோட்டுகள் தான் புழக்கத்தில் உள்ளன. இவற்றை திரும்பி அனுப்புவதில் மக்களும் வங்கிகளும் பரபரப்பாக அவசியம் இல்லை, 4 மாதங்கள் கால அவகாசம் இருக்கின்றது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளில் 89% 2017ம் ஆண்டுக்கு முன்னர் அச்சிடப்பட்டவை தான். இந்த பணத்தின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. பெருமளவில் மக்களிடையே 2000 ரூபாய் தாள்கள் பரிமாற்றத்துக்கு பயன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2018 மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 6.73 லட்சம் கோடி மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இது 2023 மார்ச் மாதத்தில் 3.62 லட்சம் கோடியாக குறைந்தது. அதாவது வெறும் 10.8 சதவீதம் தான் புழக்கத்தில் இருக்கிறது.
1000, 500 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டபோது ஏற்பட்ட நாணய பற்றாக்குறையை போக்க 2000 ரூபாய் தாள்கள் வெளியானது போலவே 2000 ரூபாய் தாள்கள் திரும்பப்பெரும்போது ஏற்படும் நாணய பற்றாக்குறையைத் தீர்க்க மற்ற ரூபாய் நோட்டுகள் தயாராக இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Clean Note Policy
2000 ரூபாய் நோட்டுகள் கிளீன் நோட் கொள்கையின் படி திரும்பப்பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கிளீன் நோட் பாலிசி என்பது ரிசர்வ் வங்கியால் 1999ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்துகிறது.
பழைய நைந்த கசங்கிய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க, வங்கிகள் தங்களுக்கு வரும் பழைய நோட்டுகளை மக்களுக்கு பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
மக்கள் ரூபாய் நோட்டுகளில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டது. அழுக்கடைந்த மற்றும் சிதைந்த நோட்டுகளை வங்கிகள் எந்த தடையும் இல்லாமல் மாற்றிக்கொடுக்க உத்தரவிடப்பட்டது.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு எந்த படிவமும் நிரப்பத் தேவையில்லை எனக் கூறியுள்ளது.
ஒரு முறையில் 20,000 ரூபாய் வரை ஒரு ஆள் ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்ற முடியும். வரிசையில் நின்று 20,000 ரூபாய் மாற்றிய பின்னர் மீண்டும் அதே வரிசையில் நின்று 20,000 ரூபாய் மாற்றிக்கொள்ளலாம்.
20,000 என்ற வரம்பு வங்கிகளின் செயல்பாட்டுக்கு இடையூறு இருக்கக் கூடாது என்பதற்காக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மார்ச் 23ம் தேதி தொடங்கும் இந்த ரூபாய் நோட்டு மாற்றும் பணி செப்டம்பர் 30ம் தேதி வரைத் தொடரும்.
தேவைப்பட்டால் செப்டம்பர் 30ம் தேதிக்கு பின்னரும் தேதி நீட்டிக்கப்படலாம். சிலர் செப்டம்பர் 30ம் தேதிக்கு பின்னர் மக்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகலாம் எனக் கூறுகின்றனர்.
தினசரி மாற்றப்படும் 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து தரவுகளை வங்கிகள் பேண வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust