தியேட்டர், ஷாப்பிங் மால் rest room கதவுகளின் கீழே இடைவெளி இருப்பது ஏன் தெரியுமா?

ஏன் தியேட்டர்கள், மால்களில் இருக்கும் கழிப்பறை கதவுகளில் மட்டும் இடைவெளி இருக்கிறது? இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Do you know why there is a gap under the theater and shopping mall rest room doors?
Do you know why there is a gap under the theater and shopping mall rest room doors?Twitter
Published on

திரையரங்கம், ஷாப்பிங் மால், மருத்துவமனை அல்லது பொதுக் கழிப்பறைக்கு சென்றால், அங்கு இருக்கும் டாய்லெட் கதவுகளின் கீழ் இடைவெளி இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

பொதுவாக அப்படி இருக்கும் டாய்லெட் கதவுகள் சிறிய கதவுகளாகவும் மேலேயும் கீழேயும் இடைவெளி விட்டு இருக்கும். ஆனால் வீட்டிலோ அல்லது ஹோட்டல் அறையிலோ அப்படி கதவுகளை இருப்பதில்லை.

ஏன் தியேட்டர்கள், மால்களில் இருக்கும் கழிப்பறை கதவுகளில் மட்டும் இடைவெளி இருக்கிறது? இங்கே தெரிந்துகொள்ளலாம்.

பொதுக் கழிப்பறையின் அடிப்பகுதியில் இடைவெளி வைப்பது அடிக்கடி அழுக்காகும் தரையை சுத்தம் செய்ய வசதியாக இருக்கும். டாய்லெட்டினுள் நுழையாமல் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிடலாம்.

அடிப்பகுதி மூடப்படாததால் பொது கழிப்பறையிலிருந்து வரும் துர்நாற்றமும் விரைவாக வெளியேறும்.

கழிவறைக்குள் இருப்பவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டாலோ அல்லது கீழே விழுந்துவிட்டாலோ கழிப்பறையின் அடி பகுதியிலிருந்து எளிதில் தெரிந்துகொள்ளலாம். கதவு முழுவதுமாக மூடப்பட்டால் அவ்வாறு தெரிந்துகொள்வது கடினம்.

Do you know why there is a gap under the theater and shopping mall rest room doors?
உருளைக்கிழங்கு முதல் காளான் வரை - மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள் - ஏன்?

பொதுகழிப்பறை கதவுகள் இரவும் பகலும் தொடர்ந்து பயன்படுத்துவதால் கதவின் கீழ் பகுதி சேதமடைய வாய்ப்புள்ளது. ஆனால் இவ்வாறு இடைவெளி விட்டால் சேதமடைவதை தவிர்க்கலாம்.

கீழே கால் தெரிவதை வைத்து உள்ளே ஆள் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளலாம். இதனால் பின்னே வருவோர் காத்திருந்து பின் செல்ல உதவியாக இருக்கும்.

இல்லையெனில் நுழைபவர்கள் சட்டென கதவை திறக்க முயல்வார்கள். அது உள்ளே இருப்பவர்களுக்கு சங்கடமாக இருக்கும் என்பதை தவிர்க்கவும் இவ்வாறு கதவின் அடியில் இடைவெளி விடப்படுகிறது.

Do you know why there is a gap under the theater and shopping mall rest room doors?
Indian Railways : ஏசி பெட்டிகள் ரயிலின் நடுபகுதியில் இருப்பது ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com