396 கோடி மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த ஐபோன் நீதா அம்பானிக்கு சொந்தமானதா? உண்மை என்ன?

பல செய்தி ஊடகங்கள் நீதா அம்பானி Falcon Supernova iPhone 6 Pink Diamond ஐப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றன, இது உலகின் மிக விலையுயர்ந்த ஐபோன் ஆகும். இதன் விலை சுமார் 48.5 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.396 கோடியாகும். வைரம் பதித்த ஐபோன் என்றும் தகவல்கள் கசிகின்றன.
396 கோடி மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த ஐபோன் நிதா அம்பானிக்கு சொந்தமானதா? உண்மை என்ன?
396 கோடி மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த ஐபோன் நிதா அம்பானிக்கு சொந்தமானதா? உண்மை என்ன?Twitter

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி தான் நீதா அம்பானி. இவர் உலகிலேயே அதிக விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பெயர் பெற்றவர்.

உலகின் மிக விலையுயர்ந்த புடவை அணிவது முதல் ரூ. 3 லட்சம் தேநீர் கோப்பைகள் வரை நீதா புதிய பேஷன் ட்ரெண்டுகளில் தன்னை ஈடுபடுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

அந்த வகையில் நீதா அம்பானி உலகின் மிக விலையுயர்ந்த செல்போனான ஃபால்கன் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டயமண்ட் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

பல செய்தி ஊடகங்கள் நீதா அம்பானி Falcon Supernova iPhone 6 Pink Diamond ஐப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றன, இது உலகின் மிக விலையுயர்ந்த ஐபோன் ஆகும்.

இதன் விலை சுமார் 48.5 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.396 கோடியாகும். வைரம் பதித்த ஐபோன் என்றும் தகவல்கள் கசிகின்றன.

ஃபால்கன் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டயமண்ட் நீதா அம்பானிக்கு சொந்தமானதா?

Falcon Supernova iPhone 6 Pink Diamond ஆனது உலகின் மிக விலையுயர்ந்த தொலைபேசியாகக் கருதப்படுகிறது.

ஃபால்கன் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டயமண்டை நீதா அம்பானி சொந்தமாக வைத்திருக்கவில்லை என்று ரிலையன்ஸ் ஆதாரங்கள் இந்தியா டுடே தொழில்நுட்பக் குழுவிடம் உறுதிப்படுத்தியுள்ளன.

396 கோடி மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த ஐபோன் நிதா அம்பானிக்கு சொந்தமானதா? உண்மை என்ன?
ரூ.1649 கோடிக்கு உலகிலேயே விலையுயர்ந்த வீட்டை வாங்கிய இந்திய குடும்பம் - யார் தெரியுமா?

இந்த போனில் பிளாட்டினம் இருக்கா?

ஃபால்கன் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டயமண்ட் என்பது 24-காரட் தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன் 6 ஆகும். அதன் பின்புறத்தில் ஒரு பெரிய இளஞ்சிவப்பு வைரம் பதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த போனில் பிளாட்டினம் பூசப்பட்டுள்ளது.

உலகின் மிக விலையுயர்ந்த போன் நீதா அம்பானிக்கு சொந்தமில்லை என்றாலும், உலகின் மிக விலையுயர்ந்த புடவையை (ரூ. 40 லட்சம்) வைத்திருக்கிறார். மேலும் உலகின் மிக விலையுயர்ந்த நெக்லஸை (ரூ. 450 கோடி) வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

396 கோடி மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த ஐபோன் நிதா அம்பானிக்கு சொந்தமானதா? உண்மை என்ன?
அம்பானி to சாவித்ரி: படிப்பை பாதியில் நிறுத்தினாலும் உலகப்பணக்காரர்களான இந்தியர்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com