ரூ.1649 கோடிக்கு உலகிலேயே விலையுயர்ந்த வீட்டை வாங்கிய இந்திய குடும்பம் - யார் தெரியுமா?

இந்த வீட்டை இதற்கு முன்னர் கிரேக்க தொழிலதிபரான அரிஸ்டாடில் ஒனாசிஸின் மகள் கிறிஸ்டினா ஒனாசிஸ் வைத்திருந்தார். அவரிடம் இருந்து வாங்கியுள்ள ஓஸ்வால் குடும்பத்தினர் வீட்டை தங்களுக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்கின்றனர்.
ரூ.1649 கோடிக்கு உலகிலேயே விலையுயர்ந்த வீட்டை வாங்கிய இந்திய குடும்பம் - யார் தெரியுமா?
ரூ.1649 கோடிக்கு உலகிலேயே விலையுயர்ந்த வீட்டை வாங்கிய இந்திய குடும்பம் - யார் தெரியுமா?Twitter

இந்திய வம்சாவளி பில்லியனரான பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவரது மனைவி ராதிகா ஓஸ்வால் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். 

4.3 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள வில்லா வரி என்ற வீரு ஜிங்ஜின்ஸ் கிராமப்புறத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து அல்ப்ஸ் பனிமலைகளின் உச்சியை ரசிக்கலாம்.

இந்த வீட்டின் விலை 1649 கோடி ரூபாய் என டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் தெரிவிக்கிறது. உலகின் டாப் 10 விலையுயர்ந்த வீடுகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. 

இந்த வீட்டை இதற்கு முன்னர் கிரேக்க தொழிலதிபரான அரிஸ்டாடில் ஒனாசிஸின் மகள் கிறிஸ்டினா ஒனாசிஸ் வைத்திருந்தார். அவரிடம் இருந்து வாங்கியுள்ள ஓஸ்வால் குடும்பத்தினர் வீட்டை தங்களுக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்கின்றனர்.

ஓபெராய் உதய்விலாஸ், லீலா ஹோட்டல்ஸ் போன்ற கட்டடங்களை வடிவமைத்தற்காக அறியப்படும் ஜெஃப்ரி வில்க்ஸ் இந்த வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

ஓஸ்வால் குடும்பம்

ஓஸ்வால் அக்ரோ மில்ஸ், ஓஸ்வால் கிரீன் டெக் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் அபேய் ஓஸ்வால். 2016ம் ஆண்டு காலமானார். இவரது மகன் பங்கஜ் ஓஸ்வால்.   

இப்போது ஓஸ்வால் குழுமத்தை பங்கஜ் ஓஸ்வால் தான் வழிநடத்துகிறார். இவர் பெட்ரோ கெமிக்கல்ஸ், ரியல் எஸ்டேட், உரங்கள் மற்றும் சுரங்கம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரூ.1649 கோடிக்கு உலகிலேயே விலையுயர்ந்த வீட்டை வாங்கிய இந்திய குடும்பம் - யார் தெரியுமா?
How To Become Rich? இந்த 7 விஷயங்களை செய்தால் நீங்களும் மில்லியனர் ஆகலாம்!

பங்கஜ் ஓஸ்வால் இந்தியாவில் பிறந்தவர். ராதிகா - பங்கஜ் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 24 வயதாகும் வசுந்திரா ஓஸ்வால் பி.ஆர்.ஓ இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடட்டின் எக்ஸிகியூடிவ் ஜெனரலாகவும், ஆக்ஸிஸ் மினரல்ஸின் இயக்குநராகவும் செயல்படுகிறார். 

ரூ.1649 கோடிக்கு உலகிலேயே விலையுயர்ந்த வீட்டை வாங்கிய இந்திய குடும்பம் - யார் தெரியுமா?
Virat Kohli: 1000 கோடி சொத்து; ஒரு இன்ஸ்டா போஸ்டுக்கு 8.9 கோடி - பணம் கொட்டியது எப்படி?

19 வயதாகும் ரிதி ஓஸ்வால் லண்டனில் கெமிக்கல் இஞ்சினியரிங் படித்து வருகிறார். இவர்கள் இருவரின் முதல் எழுத்துகளைக் கொண்டே புதிதாக வாங்கப்பட்டுள்ள ஆடம்பர வீட்டுக்கு வில்லா வரி எனப் பெயரிட்டுள்ளனர்.

ரூ.1649 கோடிக்கு உலகிலேயே விலையுயர்ந்த வீட்டை வாங்கிய இந்திய குடும்பம் - யார் தெரியுமா?
உலக வரலாற்றிலேயே பணக்கார வியாபாரி! ஆங்கிலேயருக்கே நிதி உதவி செய்தவர் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com