பெங்களூர் : லைட், மின்கட்டணம் இல்ல; இயற்கையோடு இயைந்த வீடு - அசத்தும் தம்பதி

வாணி கண்ணா மற்றும் பாலாஜி தம்பதியினரின் வீட்டுக்கு மின்கட்டணம் கிடையாது. அங்கு ஏசி இல்லாமலே சில்லென்று வாழ முடிகிறது. மிகச் சிறப்பாக அது சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காததாக உள்ளது.
Eco - Friendly House
Eco - Friendly HouseTwitter
Published on

இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் என்பது இன்றைய நவீன உலக சூழலில் பலரின் கனவாக இருக்கிறது. ஆனால் அதற்கு முற்பட வேண்டுமென்றால் நாம் பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஒருவேளை ஒரு பெரு நகரிலேயே நம்மால் அவ்வாறு வாழ முடிந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் அதைத்தான் சாதித்திருக்கிறார்கள் பெங்களூருவைச் சேர்ந்த இந்த தம்பதியினர்.

வாணி கண்ணா மற்றும் பாலாஜி தம்பதியினரின் வீட்டுக்கு மின்கட்டணம் கிடையாது. அங்கு ஏசி இல்லாமலே சில்லென்று வாழ முடிகிறது. மிகச் சிறப்பாக அது சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காததாக உள்ளது.

28 ஆண்டுகள் இங்கிலாந்தில் வாழ்ந்த இந்த தம்பதியினர் கடந்த 2018ம் ஆண்டு தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளனர். இப்போது அவர்கள் தங்கள் குழந்தைகளுக்காகவும் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணமும் வீடு ஒன்றைக் கட்டியிருக்கின்றனர்.

ஒரு ஐடியா

இங்கிலாந்தில் இருந்த போது வாணி - பாலாஜி தம்பதிக்கு முதல் குழந்தைப் பிறந்தது. அப்போது குழந்தைக்கு பயன்படுத்தும் ஃபீடிங் பாட்டில் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களைக் கணக்கெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

அது தான், அன்றாட வாழ்க்கை இயற்கையிலிருந்து எவ்வளவு விலகி இருக்கிறது என அவர்களை உணரச்செய்துள்ளது.

அதற்காக வேறு இயற்கையான பொருட்களை உபயோகப்படுத்த முயன்றுள்ளனர்.

இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு தோன்றியது. அதுவே 2010-ல் குழந்தை பிறக்கும் போது அவர்களுக்கு தாய்நாடு திரும்பும் எண்ணத்தையும் விளைவித்தது.

தோட்டம்
தோட்டம்Twitter

சொந்த வீடு

பெங்களூரில் வீடு தேடுவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர் அத்தம்பதி. பெங்களூரு அப்பார்ட்மென்ட்களின் விலை அவர்களை வாய்பிளக்க வைத்திருக்கிறது. "நாங்கள் வீடுதேடும் போது மஹிஜா நிறுவனத்தை தெரிந்துகொண்டோம். எங்களது கனவு வீட்டை உருவாக்க அவர்களை அனுகினோம்" என்கிறார் வாணி.

சொந்த வீட்டுக்காக பெங்களூருக்கு அருகில் 2400 சதுர அடி நிலம் வாங்கியவர்கள், அவர்களின் சிந்தனையை செயல்படுத்தக் கூடிய அனிரூத் ஜெகன்நாதன் என்ற வடிவமைப்பாளரையும் தேர்வு செய்தனர்.

சிறந்த சுற்றுசூழல் தீங்கற்ற வீட்டை உருவாக்கும் நடவடிக்கையில் மஹிஜா நிறுவனம் மற்றும் வடிவமைப்பாளர் அனிரூத் களமிறங்கினர். வீடு கட்டுவதற்கான ஒவ்வொரு பொருளையும் பார்த்துப்பார்த்து தேர்வு செய்யத் தொடங்கினர்.

Eco - Friendly House
நம் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறையும் - ஏன் தெரியுமா?

செங்கல்

வீட்டுக்கான செங்கலை, 7 சதவீதம் சிமென்ட், மண், செம்மண், எஃகு, சுண்ணாம்புக் கல் மற்றும் நீர் ஆகிய ஆறு கூறுகளைக் கொண்டு தயாரித்தனர். வீட்டின் மேற்கூரை மண், சேற்று கட்டிகளைக் கொண்டே உருவாக்கப்பட்டது.

இரும்பு கம்பிகள்

பொதுவாக வீட்டின் மூலையில் இரும்பு கம்பி மற்றும் கான்கிரீட்டைப் பயன்படுத்தி தூண் போன்று அமைத்து அதிலிருந்து சுவர்களை பக்கவாட்டில் கட்டுவர். ஆனால் இந்த வீட்டில் இரும்பு கம்பிகளுக்குப் பதிலாக தேங்காய் ஓடு போன்ற இயற்கைப் பொருட்களும் சேறும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சோலார் மின்சாரம்
சோலார் மின்சாரம் Twitter

இற்கை தோட்டம்

இயற்கையாக வீடு கட்டுவதுடன் இயற்கையான உணவுகளையும் உற்பத்தி செய்யும் வண்ணம் 1000 அடியில் தோட்டம் ஒன்றையும் அமைத்துள்ளனர்.

"வீட்டுக்குள் தான் இது. எங்கள் முழு உணவையும் இயற்கையாக உற்பத்தி செய்ய நாங்கள் 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம்" என்கிறார் வாணி.

மரம்

வீட்டுக்குத் தேவையான மரங்களை வாங்க பழைய மரங்களை வாங்கி உபயோகிக்கும் ஒருவரை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். வீட்டின் அலங்காரத்துக்காகவும் மரத்தை தான் பயன்படுத்தியிருக்கின்றனர்.

குளிர்ச்சி

இந்த வீட்டுக்கு ஏ.சி தேவையில்லை என்கிறார் வாணி அத்துடன் பகல் பொழுதில் லைட் போட முடியாதபடி இந்த வீடு வடிவைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

ஒளியை எப்போதும் பிரதிபலிக்க மற்றும் இயற்கையான குளிர்ச்சியை ஏற்படுத்த கூடிய கோணத்தில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது என அவர் கூறுகிறார்.

Eco - Friendly House
தென் இந்தியா : இந்த மழைக் காலத்தில் நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டிய 10 இடங்கள்

சூரிய மின்சக்தி

4.8 கிலோவாட் திறன் கொண்ட 11 சோலார் பேனல்கள் அந்த வீட்டில் இருக்கிறது. இது On Grid System எனும் முறையில் உற்பத்தி செய்யப்படுவதனால் வீட்டுத் தேவைக்கு போக மீதமாகும் மின்சாரம் யூனிடுக்கு ரூபாய் 3 எனக் கொடுக்கப்படுகிறது.

தண்ணீர் சப்ளை

வீட்டுக்கு அருகில் உள்ள சமுதாய கிணற்றில் இருந்து தண்ணீர் கிடைப்பதாக வாணி கூறுகிறார்.

Eco - Friendly House
வீட்டிற்குள்ளேயே 10000 செடிகள்; ஆண்டுக்கு 70 லட்சம் வருமானம் - எப்படி சாத்தியமானது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com