டீ கப்
டீ கப்Twitter

காபி குடித்த பின் கப்பை சாப்பிட்டு விடலாம் - வைரல் டீ கடை!

பேப்பர் அல்லது பிளாஸ்டிக் கப்புகள் குப்பைகளை ஏற்படுத்துவதுடன் சுற்றுச்சூழலையும் மோசமாக்கும். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுபிடித்தது தான் அந்த டீக்கடை பிரபலமாவதற்கு காரணம்.
Published on

குஜராத் மாநிலம் வடோரா நகரத்தில் உள்ள டீக்கடை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

உழைக்கும் மக்களின் உணவுப் பழக்கத்தில் டீ தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. உடலுக்கும் மூளைக்கும் உடனடியான புத்துணர்ச்சியை கொடுக்கக் கூடிய டீயை தேடி தேடி குடிப்பவர்களும் இருக்கின்றனர்.

கண்ணாடி கிளாஸில் டீ குடிப்பது தான் நவீன கலாச்சாரம் என்றாலும் அதன் சுகாதாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட வேண்டியுள்ளது.

மற்ற பேப்பர் அல்லது பிளாஸ்டிக் கப்புகள் குப்பைகளை ஏற்படுத்துவதுடன் சுற்றுச்சூழலையும் மோசமாக்கும்

இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுபிடித்தது தான் அந்த குஜராத் டீக்கடை பிரபலமாவதற்கு காரணம்.

உண்ணக்கூடிய டீ கப்

டீ கப்பை தூக்கிப் போட்டால் தானே குப்பை வரும். அதையும் சாப்பிட்டுவிட்டால் என்ற சிந்தனையில் உருவானது தான் இந்த சாக்லேட் டீ கப்கள்.

’கிளான் டீ ஹவுஸ்’ என்ற கடைதான் இதனை உருவாக்கியிருக்கிறது.

டீ மற்றும் சாக்லேட் விரும்பிகளை, ஒரே கல்லில் கவர் செய்ய இதனைப் பயன்படுத்துகின்றனர்.

இங்கு டீ வாங்கினால் தனியாக பிஸ்கட் வாங்க வேண்டிய அவசியமில்லை!

டீ கப்
Breakfast : இந்த உணவுகளை காலையில் சாப்பிடவே கூடாது | Visual Story

எப்படி உருவானது இந்த பிஸ்கட் கப்?

அனாதை இல்லத்தில் ஒன்றாக வளர்ந்து நண்பர்களாக இருப்பவர்கள் விகாஸ், ஷங்கர், சுராஜ் மற்றும் லவ்குஷ்.

இவர்கள் ஒன்றாக டீ கடையையும் தொடங்கியிருக்கின்றனர்.

லவ்குஷ் சுற்றுசூழல் மீது அக்கறை கொண்டிருந்தார். அரசு பிளாஸ்டிக் உபயோகத்துக்கு தடை விதித்ததால் பிளாஸ்டிக் கப்புக்கு பதிலாக கோதுமை மாவினால் செய்யப்பட்ட உண்ணக்கூடிய கப்பை பயன்படுத்த முடிவு செய்தனர்.

அந்த உண்ணக்கூடிய கப்பை அப்படியே பயன்படுத்தாமல் அதில் சாக்லேட் சாஸ் தடவி பயன்படுத்துகின்றனர்.

இது டீக்கும் பிஸ்கட்கும் இடையேயான புதிய சுவையைத் தருகிறது. சுற்றுசூழலுக்கும் ஏற்றதாக இருக்கிறது.

இந்தியர்களின் கண்டுபிடிப்புகள் எப்போதும் வித்தியாசமானவை தானே!

டீ கப்
கரடியின் சாணத்தில் தயாரிக்கப்படும் டீ - இவ்வளவு Demand ஆ ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com