மருத்துவமனைக்குள் புகுந்த யானை - அதிர்ச்சியடைந்த நோயாளிகள் - வைரல் வீடியோ

யானைகளிடம் சிக்காமல் தப்பிக்க அருகிலிருந்த அறைகளுக்குள் நுழைந்தனர். அறைகளுக்குள் பாதுக்காப்பாக பதுங்கிக்கொண்டவர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களில் யானை உள்ளே நுழைவதை வீடியோ எடுத்தனர்.
மருத்துவமனைக்குள் புகுந்த யானை
மருத்துவமனைக்குள் புகுந்த யானைஇன்ஸ்டாகிராம்

பொதுவாக மனித நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் வன விலங்குகள் புகாது என கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த நிலை சமீப காலங்களில் மாறிவிட்டது. சிறுத்தை, புலி, கரடி, யானை போன்ற விலங்குகள் மனிதர்கள் வாழும் இடத்திற்கு வருவது அதிகமாகி விட்டது.

அந்த வகையில், மருத்துவமனைக்குள் யானை ஒன்று புகுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு வங்கம் ஜல்பைகுரி என்ற இடத்தில் ராணுவ முகாம் ஒன்று அமைந்திருக்கிறது. அந்த முகாமின் மருத்துவமனைக்குள் யானைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

யானைகளிடம் சிக்காமல் தப்பிக்க அருகிலிருந்த அறைகளுக்குள் நுழைந்தனர். அறைகளுக்குள் பாதுக்காப்பாக பதுங்கிக்கொண்டவர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களில் யானை உள்ளே நுழைவதை வீடியோ எடுத்தனர்.

மூன்று யானைகள் உள்ளே புகுந்தது. யானைகளை விரட்ட விநோத சப்தங்கள் எழுப்புவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்தியா டுடே செய்தி தளம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தது. வீடியோ வெளியானதிலிருந்து பயனர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

யானைகள், மனிதர்கள் இருப்பிடத்திற்கு வருவதற்கு முக்கிய காரணம் காடுகளை அழித்தது தான் என ஒரு தரப்பினர் சாடி வருகின்றனர்.

ஒருவர், பாவம் குழந்தைகளுக்கு ஊசி போட்டு அனுப்புங்கள் என கமன்ட் செய்திருந்தார். ஒருவர், மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள், மற்றும் ஊழியர்களை பத்திரமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மருத்துவமனையில் யானைகள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மருத்துவமனைக்குள் புகுந்த யானை
சாலை நடுவே குட்டியை ஈன்ற யானை - பிரசவத்திற்காகக் காத்திருந்த வாகன ஓட்டிகள் | Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com