டீசலில் இயங்கும் வாகனங்கள் டெல்லி நுழைய தடை : என்ன காரணம்?

இதுதவிர, நகருக்குள் மக்கள் பயணிக்க வசதியாக, 60 நாட்களுக்கு டெல்லி போக்குவரத்து கழகம் மூலம் 1,000 தனியார் சிஎன்ஜி ஒப்பந்தப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படவுள்ளன.
 diesel vehicles banned in Delhi
diesel vehicles banned in Delhi Twitter

காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், டீசலில் இயங்கும் லாரிகள் நுழைவதற்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. இரண்டு தினங்களாக காற்றின் தரக்குறியீடு 450 வரை எட்டி மிகவும் மோசம் என்ற நிலையை அடைந்திருக்கிறது.

காற்று மாசினை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் டீசலில் இயங்கும் லாரிகள் நுழைவதற்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், சிஎன்ஜி வாகனங்கள் டெல்லியில் இயக்க அனுமதிக்கப்படும்.

நகரத்தில் காற்றின் தரக் குறியீடு 450-ஐத் தாண்டியதால், டெல்லி அரசு உடனடியாக இதனை அமல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

டெல்லி போக்குவரத்துத் துறை பிறப்பித்த உத்தரவின்படி, அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் லாரிகளைத் தவிர வேறு எந்த டீசல் டிரக்கும் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படாது.

 diesel vehicles banned in Delhi
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரம்: டெல்லி முதலிடம்- 40% அதிகரித்த குற்றங்கள்!

மேலும், டெல்லியில் பதிவுசெய்யப்பட்ட டீசலில் இயக்கப்படும் நடுத்தர சரக்கு வாகனங்கள் (எம்ஜிவி) மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் (எச்ஜிவி) ஆகியவையும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதைத் தவிர இயக்க அனுமதி இல்லை.

டெல்லி போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், டெல்லியின் என்சிடியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் லைட் மோட்டார் வாகனம் (எல்எம்வி) - 4 சக்கர வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 diesel vehicles banned in Delhi
சென்னை டூ டெல்லி ஒரு நிமிடத்தில் செல்லலாம்: ஒலியைவிட வேகம் - எப்படி சாத்தியமானது இது?

இதுதவிர, நகருக்குள் மக்கள் பயணிக்க வசதியாக, பொதுப் போக்குவரத்து சேவையாக 60 நாட்களுக்கு டெல்லி போக்குவரத்து கழகம் மூலம் 1,000 தனியார் சிஎன்ஜி ஒப்பந்தப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படவுள்ளன.

எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப இது 90 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம். முதற்கட்டமாக 500 பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com