விமானங்கள் எப்போதும் வியப்பூட்டுபவையாக இருக்கின்றன. பெருநகரங்களில் விமான நிலையத்துக்கு அருகில் வசிக்கும் ஒருவர் கூட ஏதோ ஒரு தருணத்தில் அந்த உலோகப் பெட்டியில் உட்கார்ந்த படி பறக்கும் மனிதர்களை நினைத்து ஆச்சரியப்படுவர்.
விமானத்தின் பெரிய உருவமும் அதனை இயக்கும் தொழில்நுட்பங்களும் மனிதனுக்கு அற்புதமாகத் தோன்றும். ஆனால் அடிக்கடி விமான பயணம் மேற்கொள்ளும் ஒருவருக்கோ அல்லது ஒரு விமானிக்கோ விமானங்கள் சலித்துவிடும் என்று நினைக்கிறீர்களா? நிச்சயம் இல்லை. அவர்களையும் ஆச்சரியப்படுத்தும் விமானங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் சூப்பர்சோனிக் விமானம் (Supersonic Planes)
சாதாரண விமானங்களை விட இரண்டு மடங்கு வேகத்தில் செல்லக் கூடியது சூப்பர்சோனிக் விமானங்கள். இது ஒலியை விட வேகமாக சென்றடையக் கூடியது. அதாவது விமானம் பறக்கும் போது வரும் சத்தத்தை விட அதிக வேகத்தில் விமானமே செல்லும்.
இந்த சூப்பர்சோனிக் விமானங்கள் உருவாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. முதல் சூப்பர் சோனிக் விமானம் கடந்த 1947ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி இயக்கப்பட்டது. ஆனால் அது பயணிகளுக்காக அல்ல.
அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் ஈ என்ற விமானி முதல் சூப்பர்சோனிக் விமானத்தை இயக்கினார். அதன் அதிக வேகம் மற்றும் தரை இறங்குவதில் ஏற்படும் பிரச்னைகள் காரணமாக அந்த விமானம் அப்போது அனுமதிக்கப்படவில்லை.
1973 முதல் 2003 வரை 30 ஆண்டுகள் ஃப்ரான்கோ பிரிட்டிஷ் கான்கோர்ட் என்ற நிறுவனம் பயணிகள் சூப்பர்சோனிக் விமானத்தை இயக்கி வந்தது.
ஆனால், இந்த விமானங்கள் அதிக மாசு மற்றும் இரைச்சல் ஏற்படுத்தக் கூடியதாக இருந்தன.
லாபமும் இல்லாததால் இவை கைவிடப்பட்டன.
பூம் நிறுவனம் நவீன ஓவர்ச்சர் என்ற விமானத்தின் இறுதி வடிவமைப்பை சமீபத்தில் வெளியிட்டது. விமானப் பயணத்தில் இந்த விமானம் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று பூம் நிறுவனம் உறுதியாக நம்புகிறது.
இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 2100 கிலோமீட்டர். சாதாரணமாக ஒரு விமானம் மணிக்கு 740-930 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
ஏற்கெனவே வழக்கத்தில் இருந்த சூப்பர்சோனிக் விமானத்தை விட லாபகரமான, அதிக திறன் கொண்ட, விலை மலிவான, சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விமானமாக ஓவர்ச்சர் உருவாகவிருப்பதாக பூம் நிறுவனம் கூறியுள்ளது.
இதன் பயணக் கட்டணம் சாதாரண விமானங்களின் பிசினஸ் வகுப்பு கட்டணத்துக்கு இணையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது இதற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த சூப்பர்சோனிக் விமானத்தை விடக் குறைவு.
சூப்பர்சோனிக் விமானங்களை மீண்டும் வழக்கத்துக்கு கொண்டுவரும் பூம் நிறுவனத்தின் முயற்சியில் நடைமுறைச் சிக்கல்கள் பல உள்ளன. அது லாபகரமானதாக இருப்பது அவசியமாகிறது.
முக்கியமாக இதுவரையில் சூப்பர்சோனிக் விமானங்கள் கடல் பரப்பின் மேல் மட்டுமே பறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஒருவேளை சூப்பர்சோனிக் விமானங்கள் நடைமுறைக்கு வந்தால் நியூயார்கிலிருந்து லண்டனுக்கு மூன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust