முகலாயர்கள் காலத்தில் தொடங்கிய இந்தியாவின் கண்ணாடி தலைநகரம் குறித்து தெரியுமா?

எத்தனை தலைமுறைகள் ஆனாலும், முகலாயர்கள் காலத்தில் செய்து வந்த நேர்த்தி குறையாமல் இருக்கிறது. கண்ணாடி பொருட்கள் வெறுமனே பெயருக்கு என்று இல்லாமல் அதில் தங்களால் ஆன கலைநயங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
Experience the centuries-old glass making tradition of Firozabad in UP
Experience the centuries-old glass making tradition of Firozabad in UPTwitter
Published on

நம் அன்றாட வாழ்வில் கண்ணாடி பொருட்களின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. கண்ணாடி பாட்டில்கள் , கண்ணாடி கிண்ணங்கள், கண்ணாடி ஜாடிகள், கண்ணாடி விளக்குகள், இவ்வளவு ஏன் பெண்கள் கூட திருமணம், வளைகாப்பு போன்ற நிகழ்வுகளில் போது கண்ணாடி வளையல்களை அணிகிறார்கள். இப்படி பலவகையான கண்ணாடி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த கண்ணாடி பொருட்கள் தயாரிக்கும் தொழிசாலைகள் நிறைய இருந்தாலும், இந்தியாவின் கண்ணாடி நகரம் பற்றி தெரியுமா? இங்கே தெரிந்துகொள்ளலாம்.

உத்திரபிரதேசத்தில் இருக்கும் ஃபிரோசாபாத் தான் இந்தியாவின் கண்ணாடி நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஃபிரோசாபாத் இன்று நேற்று கண்ணாடி தயாரிப்பில் ஈடுபடும் இடமல்ல,பல நூற்றாண்டுகளாக இந்த துறையில் சிறந்து விளங்கும் பாரம்பரியம் கொண்டுள்ளது.

வரலாற்று ரீதியாக பார்த்தால் முகலாய காலத்தில் தான் ஃபிரோசாபாத்தில் கண்ணாடி தயாரிப்பது தொடங்கியுள்ளது. குறிப்பாக பேரரசர் அக்பர் ஆண்ட 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் ஒரு கண்ணாடி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து இங்குள்ள மக்கள் கண்ணாடி பொருட்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

அப்படி வளர்ந்து வந்த தொழில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் செழிக்கத் தொடங்கியது. இன்று வரை, இங்கு கண்ணாடி வேலைகள் செய்யும் கைவினைஞர்கள் கஞ்சகர் என்று அழைக்கப்படுகிறார்கள் . கண்ணாடி தயாரிக்கும் திறன் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வருகிறது.

Experience the centuries-old glass making tradition of Firozabad in UP
இந்திய ரூபாய் நாணயங்களில் இருக்கும் குறியீடுக்கு காரணம் என்ன? | Explained

இதனால் எத்தனை தலைமுறைகள் ஆனாலும், முகலாயர்கள் காலத்தில் செய்து வந்த நேர்த்தி குறையாமல் இருக்கிறது. இங்கு வளையல்கள், விளக்குகள், சரவிளக்குகள், குவளைகள், கிண்ணங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள், கண்ணாடி சிலைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

கண்ணாடி பொருட்கள் வெறுமனே பெயருக்கு என்று இல்லாமல் அதில் தங்களால் ஆன கலைநயங்களை வெளிப்படுத்துகிறார்கள்.

கண்ணாடி பொருட்களை சேமிக்கும் மக்களுக்கு ஃபிரோசாபாத் சிறந்த வரப்ரசாதமாக அமையும். கண்ணாடியில் செய்யப்பட்ட வீடு அலங்கார பொருட்கள், கண்ணாடி சார்ந்த பல புதுமையான பொருள்களை நீங்கள் வாங்கலாம். உத்திர பிரதேசம் பக்கம் போனால் நிச்சயம் ஃபிரோசாபாத் சந்தைகளை பார்த்து வாருங்கள்.

Experience the centuries-old glass making tradition of Firozabad in UP
வீட்டில் தனி இடம்! பாம்புகளோடு ஒன்றாக வாழும் இந்திய கிராமம் - பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com