Law
LawTwitter

சாதி மறுப்பு திருமணம் : சட்டரீதியாக பாதுகாத்துக் கொள்வது எப்படி?

இந்தியாவில் சுமார் 5.8 சதவீத திருமணங்கள் மட்டுமே மாற்ற சமூக திருமணங்களாகப் பதிவாகியுள்ளன. இது கிட்டத்தட்ட கடந்த 40 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
Published on

வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் அல்லது ஆண்னை மணப்பது தான் கலப்புத் திருமணம். தமிழ்நாடு போன்ற சமூக நீதியில் முன்னேறிய மாநிலத்திலேயே இப்போதும் பல ஆணவக் கொலைகள் நடப்பதை நாம் செய்திகளில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அறிவியல் உச்சத்தில் இருக்கும் இந்த 2022ஆம் ஆண்டில் கூட வேறு சாதியில் திருமணம் செய்தால், சாதியில் கலப்பு ஏற்பட்டு விடும், சுத்தமான சாதி என்கிற பெயரை இழந்துவிடுவோம் எனப் பலரும் வெளிப்படையாகக் கூறுவதைப் பார்த்திருக்கலாம் அல்லது கேட்டிருக்கலாம்.

இப்படி இந்தியாவில் ஒரு தரப்பினர் மாற்று சாதி மதங்களில் திருமணம் செய்து கொள்வதை எதிர்க்கும் அதே நேரத்தில், அம்பேத்கர், பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள், மாற்று சமூக திருமணங்கள் தான் இந்திய சாதி அமைப்பை ஒழிப்பதற்கான சரியான வழி எனப் பல தருணங்களில் கூறியுள்ளனர்.

இப்படி ஒரு சூழலில் மாற்று சமூகத்தினரைத் திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் சட்டப்படி அதைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதைத் தான் இங்குப் பார்க்கப் போகிறோம்.

marriage
marriageTwitter

5% திருமணங்கள் மட்டுமே மாற்று சாதி திருமணங்கள்

2011ஆம் ஆண்டு சென்செஸ் தரவுகள் படி ஒட்டுமொத்த இந்தியாவில் சுமார் 5.8 சதவீத திருமணங்கள் மட்டுமே மாற்ற சமூக திருமணங்களாகப் பதிவாகியுள்ளன. இது கிட்டத்தட்ட கடந்த 40 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

அதே போல இந்தியாவின் மனித வள மேம்பாட்டு சர்வேயில் மாற்று சமூகத்தினரை திருமணம் செய்து கொள்வது வெறும் 5 சதவீதமாக மட்டுமே இருக்கிறது.

2016ஆம் ஆண்டின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் படி, 77 கொலைகள் ஆணவக் கொலைகளாகப் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை குறைவு, இன்னும் பல ஆணவக் கொலைகள் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை அல்லது தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக இந்தியா டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, மிகப்பெரிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மாற்று சமூகத்தினரை திருமணம் செய்வது தொடர்பாக Social Attitudes Research for India (Sari) என்கிற பெயரில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது.

marriage
marriage pexels

அதில் பெரும்பாலான மக்கள் மாற்று சமூகம் & மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு எதிராக உள்ளனர் என்பதை விட, மாற்று சமூகம் & மதத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதற்குத் தடை விதிக்க தனி சட்டமே இயற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

2010ஆம் ஆண்டு பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுக்க ஒரு தனி பாதுகாப்பு இல்லத்தை அமைக்குமாறு மாநில அரசுக்கு வழிகாட்டியது.

2010ஆம் ஆண்டு வெறும் 6 ஜோடிகள் மட்டுமே அடைக்கலம் கேட்டு வந்தனர். ஆனால் அடுத்த 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் 1,465ஆக அதிகரித்தது என ட்ரிபியூன் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள் சொல்வதென்ன?

வயது வந்த இரு நபர்களுக்கு மத்தியில் ஒத்துப் போய் திருமணம் செய்து கொண்டால் அது சட்டப்படி செல்லும் என்றும், அவர்களின் சாதி அதற்கு ஒரு தடை அல்ல என கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.

2021ஆம் ஆண்டில் மாற்று சமூகத்தினரை திருமணம் செய்து கொண்டது தொடர்பான வழக்கில், பெண்ணின் தகப்பனார், திருமணம் செய்து கொண்டவர்கள் மீது குற்றவியல் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அவ்வழக்கிலிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு திருமணம் செய்து கொண்டவர்கள் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டனர். அப்போது மாற்று சமூகத்தினரை திருமணம் செய்து கொள்வதை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். அதோடு இது போன்ற சமூக ரீதியில் மிகவும் உணர்வுப் பூர்வமான வழக்குகளைக் கையாளும் காவலர்களுக்கு தனி வழிகாட்டுதல்களும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

Law
எனக்கு 18, அவளுக்கு 28 : அதிக வயது இடைவெளியில் திருமணம் - உளவியல் ரீதியாக பிரச்னை வருமா?
Law
LawTwitter

2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவும் ஒரு மாற்று சமூகத் திருமண வழக்கில் மேற்கூறியதையே சுட்டிக்காட்டினார். நீதிபதி ஜஸ்மீத் சிங்கும் இதே போன்றதொரு வழக்கில் மாற்று சமூகத்தினர் திருமணத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

இத்தனை நீதிபதிகளும், நீதிமன்றங்களும் ஆணோ, பெண்ணோ தன் விருப்பத்துக்கு ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதை ஆதரித்துப் பேசும் இந்த விஷயம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்றும் புதியதல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆர்டிகள் 21-ன் படி வாழ்வதற்கான உரிமை மற்றும் சுதந்திரத்தில் இது குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Law
பிரதாப் போத்தன் டு பார்த்திபன்: காதல் திருமணம் செய்தும் விவாகரத்து பெற்ற திரையுலக ஜோடிகள்
law
law twitter

தனி சட்டம் இருக்கிறதா?

Special Marriage Act (SMA) 1954 என்கிற பெயரில் ஒரு தனி சிறப்பு திருமணச் சட்டமே இருக்கிறது. மாற்று சமூகம் & மதத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால் அதை பதிவு செய்வதற்கும் அத்திருமணம் செல்லுபடியாகும் என்பதற்கும் இச்சட்டம் பயன்படுகிறது. ஒரு சிவில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வயது வந்தோர் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் இச்சட்டம் வழிவகுக்கிறது.

இந்து, இஸ்லாம், கிறித்துவம், சீக், ஜெயின், பெளத்தம் ஆகிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம். இச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள எந்த வித மதம் சார்ந்த சடங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. இது இந்தியக் குடிமக்கள் மட்டுமின்றி, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கும் பொருந்தும்.

Law
LawTwitter

இச்சட்டத்தின் 4ஆவது பிரிவின் படி, திருமணம் செய்து கொள்ளும் இருவரும் ஒப்புதல் கொடுக்கும் நிலையில் (நல்ல மனநிலையில்) இருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் இருவரும் தங்கள் பகுதியில் உள்ள திருமண அதிகாரிக்கு நோட்டிஸ் வழங்க வேண்டும். அவர்கள் திருமணம் தொடர்பான விவரத்தை திருமண அதிகாரி தன் அலுவலகத்தில் பிரசுரிப்பார்.

அடுத்த 30 நாட்களுக்குள் இருவருக்கும் எந்தவித ஆட்சேபணை இல்லையெனில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்படும். ஒருவேளை ஆட்சேபணை இருந்தால், அந்த நோட்டிஸுக்கு எதிராக தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம்.

மாற்று சமூகத்தினரைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து கொள்ளும் ஜோடியில், ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த ஜோடிக்கு மத்திய அரசின் திட்டப்படி, மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

Law
30 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் - இந்த வினோத சடங்கு ஏன் ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com