30 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் - இந்த வினோத சடங்கு ஏன் ?

திருமணத்திற்கான சராசரியான வயது 30 என்பதால் இந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு அந்த குடும்பத்தினர் திருமண விழாவை செய்து வைக்கின்றனர்.
பிரேத கல்யாணம்
பிரேத கல்யாணம்Twitter
Published on

கர்நாடகா மாநிலத்தில் உள்ள தக்ஷின கன்னடா மாவட்டத்தில் ஒரு வினோதமான திருமண சடங்கை நடத்துகின்றனர்.

30 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. என்ன காரணம் என்பது குறித்துக் காணலாம்

பிரேத கல்யாணம்

இந்த சடங்கை ’பிரேத கல்யாணம்’ என்றழைப்பர். பிறக்கும் போதே இறக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும், இது போன்ற சடங்குகளை நடத்துகின்றனர்.

திருமணத்திற்கான சராசரியான வயது 30 என்பதால் இந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு அந்த குடும்பத்தினர் திருமண விழாவை செய்து வைக்கின்றனர்.

இவர்களின் ஆன்மாவைப் போற்றி சாந்தியடையச் செய்யும் விதமாக இந்த திருமண சடங்கை அவர்களுக்கு செய்கிறார்கள்.

பிரேத கல்யாணம்
தகரத்தை தங்கமாக்கும் மந்திரக் கல் : வினோத சடங்கால் வந்த வினை - என்ன நடந்தது?

வினோத திருமண சடங்கு

இருக்கைகளை அருகருகே வைத்து மணமகள், மணமகனாகக் கருதி புதிய திருமண ஆடைகளை அவற்றின் மீது வைத்துவிடுகின்றனர்.

இருக்கைகளில் மணமக்கள் இருப்பதாகக் கருதி இரு குடும்பத்தினரும் சடங்குகளைச் செய்து வருகின்றனர்.

பின்னர் முகூர்த்த நேரத்தில் மணமக்களுக்குப் பெயர் சுட்டி, அட்சதை தூவி ஆசிர்வதித்து, பின்னர் ஆரத்தி எடுத்து வீட்டிற்கு வரவேற்கின்றனர்.

இவ்வாறு திருமணத்தின் அனைத்து சடங்குகளையும் இரு குடும்பத்தாரும் முறைப்படி செய்து வைக்கின்றனர்

கறி விருந்து

திருமண விருந்து உணவாக மீன் வறுவல், சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி உள்ளிட்ட பல வகையான உணவுகளை அங்கு விருந்தாகப் படைக்கின்றனர்.

யூடியூபரான அன்னி அருண் என்பவர் இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிறக்கும் போது உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு 30 ஆண்டுகள் கழித்து இவ்வாறு திருமணம் செய்து வைப்பது அவர்களின் ஆன்மாவை நீண்ட நாள்கள் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இந்த சடங்கினை கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேத கல்யாணம்
மாதம் ஒரு பீட்சா, பார்ட்டியில் நல்ல ஃபோட்டோ - திருமணம் செய்ய இப்படியெல்லாம் கண்டிஷன்களா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com