கேரளா: மூணாறுக்கு அருகில் மறைந்திருக்கும் இந்த தேவிகுளம் பற்றி தெரியுமா?

கேரளாவின் இயற்கை அழகியல், கலாச்சாரச் செழுமை மற்றும் அமைதியான நிலப்பரப்புகளை கொண்ட இடம் தான் இந்த தேவிகுளம்
கேரளாவில் மறைந்திருக்கும் தேவிகுளம் பற்றி தெரியுமா?
கேரளாவில் மறைந்திருக்கும் தேவிகுளம் பற்றி தெரியுமா?twitter

இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று கேரளா. இதனை கடவுளின் சொந்த நிலம் என்று அழைக்கின்றனர்.

கேரளா அதன் உணவு வகை, குளிர்ச்சியான வெப்பநிலை, உப்பங்கழிகள், கோவில்களுக்காக பிரபலமாக உள்ளது. இங்கு அதிக மனித வாடை படாத ஓரிடம் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் தேவிகுளம் பற்றி தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

இது கேரளாவின் இயற்கை அழகியல், கலாச்சாரச் செழுமை மற்றும் அமைதியான நிலப்பரப்புகளை கொண்ட இடமாகும்.

ஆம், பச்சை பசேல் என்ற தேயிலை தோட்டங்கள், ஏரிகள், வன விலங்குகள், பண்டைய கோவில்களால் நிறைந்திருக்கிறது தேவிகுளம்.

கதைகளின் படி, ராமரின் மனைவியான சீதை இந்த ஊர் குளத்தின் தண்ணீரில் குளித்ததாக நம்பப்படுகிறது. இதனால் தான் இந்த இடத்திற்கு தேவிகுளம், அதாவது தெய்வத்தின் குளம் என்று பெயர் வந்தது.

முன்பே குறிப்பிட்டது போல் தேவிகுளம் மலைப்பகுதி தேயிலை தோட்டங்களால் நிறைந்திருக்கிறது. சாகச பிரியர்கள், டிரெக்கிங் செல்பவர்களுக்கு இது சிறந்த சாய்ஸ் ஆக இருக்கிறது.

அடர்ந்த காடுகளால் சூழ்ந்த தேவிகுளத்து ஏரியின் கரைகளில் அமர்ந்து நீங்கள் உலகை ரசிக்கலாம், அல்லது போட்டிங் செல்ல விரும்பினால், அதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது

கேரளாவில் மறைந்திருக்கும் தேவிகுளம் பற்றி தெரியுமா?
கேரளா டு மேகாலயா: ஏப்ரல் மாதம் சுற்றிப்பார்க்க 20 இடங்கள்!

இங்கு எரவிகுளம் தேசிய பூங்கா அமைந்திருக்கிறது. இந்த தேசிய பூங்காவில் அழிவின் விளிம்பில் இருக்கும் நீலகிரி டார், இதர வன விலங்குளான யானைகள், சிறுத்தைகள், பல அரிய வகை பறவைகளையும் நாம் காணலாம். வனவியல் ஆர்வலர்கள் இங்கு சென்றால் உங்களுக்கு சிறந்த அனுபவங்கள் கிடைக்கும்

இதை தவிர இங்கு சீதைக்கு கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியின் பாரம்பரிய சடங்குகள் மற்றும் கட்டிடங்களை காணலாம். அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் தேவிகுளம் சென்று வரலாம்

கொச்சின் விமான நிலையத்தில் இருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது தேவிகுளம். மூணாறிலிருந்து பஸ் மற்றும் வாடகை கார் வசதிகளும் உள்ளன

கேரளாவில் மறைந்திருக்கும் தேவிகுளம் பற்றி தெரியுமா?
கேரளா : 3,600 அடி உயரத்தில் இந்தியா நீளமான கண்ணாடி பாலம் - கட்டணம் 500 ரூபாய் தானா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com