கேரளா : 3,600 அடி உயரத்தில் இந்தியா நீளமான கண்ணாடி பாலம் - கட்டணம் 500 ரூபாய் தானா?

பசுமையால் சூழப்பட்ட, இந்த பாலத்தின் முடிவில் மலைகள், பள்ளத்தாக்குகள் என கண்கவர் காட்சிகளை அனுபவிக்க முடியும். ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 35 டன் எஃகு இந்த குறிப்பிடத்தக்க கட்டமைப்பை உருவாக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
India gets its longest glass bridge in Vagamon, Kerala!
India gets its longest glass bridge in Vagamon, Kerala!Twitter

கேரளா மாநிலம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் இந்த கண்ணாடி பாலம்.

கேரளாவில் உள்ள வாகமனில் மிக நீளமான கண்ணாடி பாலம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிஏ முகமது ரியாஸால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வாகமன் மலைப்பகுதியின் கடல் மட்டத்திலிருந்து 3,600 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பாலம் 40 மீ நீளம் கொண்டது.

பசுமையால் சூழப்பட்ட, இந்த பாலத்தின் முடிவில் மலைகள், பள்ளத்தாக்குகள் என கண்கவர் காட்சிகளை அனுபவிக்க முடியும்.

ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 35 டன் எஃகு இந்த குறிப்பிடத்தக்க கட்டமைப்பை உருவாக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ரூ.3 கோடி செலவில் 120 அடி நீளத்தில் 5 அடுக்கு கண்ணாடிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் வரை நடக்கலாம்

India gets its longest glass bridge in Vagamon, Kerala!
கேரளா: இந்தியாவின் அழகான கிராமத்தில் மக்கள் அவதி - பாலக்காட்டு சொர்க்கம் பரிதவிப்பது ஏன்?

இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்னும் பெருமையினை பெற்றுள்ள இந்த சுற்றுலா தளத்தினை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்து வருகின்றனர். இதற்காக ஒரு நபருக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் நீளமான தொங்கும் நடை பாலம் செக் குடியரசு நாட்டின் மவுன் டெய்ன்ரிசார்ட் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,100 மீட்டர், அதாவது, 3 ஆயிரத்து 610 அடி உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

India gets its longest glass bridge in Vagamon, Kerala!
கேரளா: மாநிலத்தின் பெயரை மாற்றும் அரசு - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com