இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகள் பற்றி தெரியுமா?மழைக்காலத்தில் செல்ல வேண்டிய இடங்கள்!

இந்த அற்புதமான நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. மழைக்காலம் இந்த நீர்வீழ்ச்சிகளை பார்வையிட சிறந்த நேரமாகும். இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகள் பற்றி தான் சொல்ல போகிறோம்.
Exploring India's highest waterfalls that leave you awestruck
Exploring India's highest waterfalls that leave you awestruckTwitter
Published on

உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அற்புதமான நீர்வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது இந்தியா.

பசுமையான காடுகள் முதல் மயக்கும் மலைகள் வரை இயற்கை பொக்கிஷங்கள் இந்தியாவில் உள்ளன. அதுமட்டுமல்லாமல் உயரமான நீர்வீழ்ச்சிகள் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு இந்த அற்புதமான நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.

மழைக்காலம் இந்த நீர்வீழ்ச்சிகளை பார்வையிட சிறந்த நேரமாகும். இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகள் பற்றி தான் சொல்ல போகிறோம்.

வஜ்ராய் நீர்வீழ்ச்சி

இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று இந்த வஜ்ராய் நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி 1840 அடி (560 மீட்டர்) உயரத்தில் ஒரு நேரான பாறையிலிருந்து மூன்று கட்டங்களாக விழுகிறது.

மேற்கு மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு ஊர்மோதி நதி நீர் வழங்குகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வார இறுதி நாட்களில் நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ செல்லலாம்.

குஞ்சிகல் நீர்வீழ்ச்சி

குஞ்சிகல் நீர்வீழ்ச்சி கர்நாடகா மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில், மஸ்திகாட்டிற்கு அருகில் காணப்படுகிறது.

உலக அருவிகளின் தரவுத்தளத்தின்படி குஞ்சிகல் நீர்வீழ்ச்சி பாறைக் கற்களால் கீழே விழுகிறது. இதன் வீழ்ச்சியின் மொத்த உயரம் 455 மீட்டர் (1493 அடி) ஆகும்.

பரேஹிபானி நீர்வீழ்ச்சி

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிம்லிபால் தேசிய பூங்காவில் அமைந்துள்ள இரண்டு அடுக்கு நீர்வீழ்ச்சி ஆகும். புதபலங்கா நதி பள்ளத்தாக்கு வழியாக பாயும் இந்த நீர்வீழ்ச்சி 399 மீட்டர் (1,309 அடி) உயரத்தில் இருந்து கீழே உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், பரேஹிபானி நீர்வீழ்ச்சியைக் காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிம்லிபாலுக்குச் செல்கின்றனர்.

Exploring India's highest waterfalls that leave you awestruck
பைக்காரா : ஊட்டியில் இருக்கும் இந்த அழகிய நீர்வீழ்ச்சி குறித்து தெரியுமா?

நோகலிகை நீர்வீழ்ச்சி

இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று நோகலிகை நீர்வீழ்ச்சி. 340 மீட்டர் உயரம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி சிரபுஞ்சிக்கு அருகில் அமைந்துள்ளது. நோகலிகை நீர்வீழ்ச்சி, குளம் போன்ற வடிவில் விழுகிறது.

நோகலிகைக்கு வருகை தருவதற்கு ஆண்டின் சிறந்த நேரம் மழைக்காலம் ஆகும். இங்கு நீர்வீழ்ச்சிகள் மற்றும் பசுமையான சுற்றுப்புறங்களின் பரந்த காட்சிகளை காணலாம்.

Exploring India's highest waterfalls that leave you awestruck
தலைகீழ் நீர்வீழ்ச்சி முதல் தங்கப்பாறை வரை - புவியீர்ப்பு விசை இல்லாத 5 விசித்திர ஸ்பாட்ஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com