Pykara Falls: A Hidern Gem in The Nigiris that Should Be On Your Visit List
Pykara Falls: A Hidern Gem in The Nigiris that Should Be On Your Visit ListTwitter

பைக்காரா : ஊட்டியில் இருக்கும் இந்த அழகிய நீர்வீழ்ச்சி குறித்து தெரியுமா?

பார்வையாளர்கள் பைக்காரா ஏரியில் படகுப் பயணம் மேற்கொள்ளலாம், அருவியின் உச்சிக்கு மலையேற்றம் செய்யலாம். முகாம்கள் அமைத்து இங்கு தங்கலாம். உங்கள் குடும்பத்துடன் ஒரு நாளைக் கழிக்க ஊட்டியில் பைகாரா ஏரி சரியான இடமாகும்.
Published on

நீங்கள் ஊட்டிக்கு செல்கிறீர்கள் என்றால் பைக்காரா நீர்வீழ்ச்சியைப் பார்க்காமல் அந்த பயணம் முழுமையடையாது என்றே சொல்லலாம். ஊட்டியிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள பைகாரா, பயண பிரியர்களுக்கு, குடும்பங்களுக்கு ஏற்ற இடமாகும்.

நீலகிரியின் மலை சரிவுகளில் நுழையும் போது, பசுமையான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் பின்னணியில் அழகிய நிலப்பரப்புகளை பைக்காரா கொண்டுள்ளது. இங்கு அமைந்துள்ள நீர்வீழ்ச்சியை காண சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

முக்கூர்த்தி மலை உயரத்திலிருந்து உருவாகும் இந்த பைகாரா நீர்வீழ்ச்சி பசுமையான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையே பாய்கிறது.

அதுமட்டுமில்லாமல் ஊட்டியின் அழகை அனுஅனுவாக விவரிக்கிறது. இந்தப் பகுதியின் பூர்வகுடிகளான தோடர் இனப் பழங்குடி மக்கள் இதைப் புனித நதியாகப் போற்றுகின்றனர்.

குளிர்ந்த மூடுபனி சுற்றுபுறம், மலையேற்றம் என பைக்காரா நீர்வீழ்ச்சியின் இனிமையான சூழல், உங்களை பிரமிப்பாக்கும். அமைதியைத் தேடி ஒரு பயணம் என்பவர்களுக்கு இந்த இடம் நிச்சயம் மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்.

பைக்காரா நீர்வீழ்ச்சியை எப்போது பார்க்கலாம்.

ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பைக்காரா நீர்வீழ்ச்சியை நீங்கள் பார்வையிடலாம். இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் சென்றால் இன்னும் சிறப்பாக இருக்குமே தவிர, ஆண்டு முழுவதும் இந்த நீர்வீழ்ச்சி உங்களை பிரமிக்க வைக்க தவறாது.

Pykara Falls: A Hidern Gem in The Nigiris that Should Be On Your Visit List
ஊட்டி : மலை வாசஸ்தலத்தில் மறைக்கப்பட்ட ”பனிச்சரிவு ஏரி” குறித்து தெரியுமா? பட்ஜெட் Spot

பார்வையாளர்கள் பைக்காரா ஏரியில் படகுப் பயணம் மேற்கொள்ளலாம், அருவியின் உச்சிக்கு மலையேற்றம் செய்யலாம். முகாம்கள் அமைத்து இங்கு தங்கலாம்.

நகர்ப்புற வாழ்க்கையின் சோர்வு மற்றும் இரைச்சலிருந்து விடுவிக்கப்பட்டு புத்துணர்ச்சியடைய, வார இறுதி விடுமுறை நாட்களில் பைகாரா உங்களை அழைக்கின்றது. உங்கள் குடும்பத்துடன் ஒரு நாளைக் கழிக்க ஊட்டியில் பைகாரா ஏரி சரியான இடமாகும்.

Pykara Falls: A Hidern Gem in The Nigiris that Should Be On Your Visit List
ஊட்டி: கேர்ன் ஹில் முதல் முத்தநாடு மந்து வரை: பயணிகள் பார்க்கத்தவறும் பூலோக சொர்க்கம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com