Indian Railways : 90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காணாமல் போனதா? - Fact Check

சரக்கு ரயிலை அதிகாரிகள் நாசிக் வரை சரியாக கண்காணித்து வந்தனர். ரயில் நாசிக்கிலிருந்து கல்யாண் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, கசாரா அருகிலுள்ள ஓம்பர்மாலி என்ற இடத்தில் திடீரென காணாமல் போய்விட்டதாகக் கூறப்பட்டது.
90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காணாமல் போனதா?
90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காணாமல் போனதா? ட்விட்டர்

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரிலிருந்து பிப்ரவரி ஒன்றாம் தேதி சரக்கு ரயில் ஒன்று ஏற்றுமதிக்காக 90 கன்டெய்னர்களுடன் மும்பை வந்து கொண்டிருந்தது.

ரயில் 4 அல்லது 5 நாள்களில் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்த ரயில் மும்பை துறைமுகத்துக்கு வந்து சேரவில்லை.

சரக்கு ரயிலை அதிகாரிகள் நாசிக் வரை சரியாக கண்காணித்து வந்தனர். ரயில் நாசிக்கிலிருந்து கல்யாண் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, கசாரா அருகிலுள்ள ஓம்பர்மாலி என்ற இடத்தில் திடீரென காணாமல் போய்விட்டதாகக் கூறப்பட்டது.

Hitavada மற்றும் Nagpur Today உள்ளிட்ட வட இந்திய பத்திரிகைகள் இதனை செய்தியாக வெளியிட்டனர். இந்த செய்தி ஏற்றுமதியாளர்களை கவலைக்கு உள்ளாக்கியது.

மேலும் இந்த செய்தி தீயாக பரவ ட்விட்டரில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஒரு முழு ரயிலும் எப்படி காணாமல் போக முடியும்? யார் இவ்வளவு பெரிய கொள்ளையை நிகழ்த்த முடியும்? எனக் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காணாமல் போனதா?
இளையராஜாவை சந்தித்தாரா சுந்தர் பிச்சை? | Fact Check
90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காணாமல் போனதா?
பீகார்: 60 அடி பாலத்தைத் திருடிய பலே திருடர்கள் - ஓர் ஆச்சர்ய திருட்டு

ரயில்வே விளக்கம்

ரயில் காணாமல் போனதாக கூறப்பட்ட செய்தி உண்மையில்லை. இந்த தெளிவுரையை வாசகர்களிடம் எடுத்துச் செல்லலாம் என Hitavada பத்திரிகைக்கு இந்தியன் ரயில்வே எழுதியுள்ளது.

மேலும் அந்த செய்திகள் தவறானவை என ட்விட்டரிலும் விளக்கம் அளித்துள்ளது.

பத்திரிகையாளருக்கு கொடுக்கப்பட்ட தவறான தகவல் குறித்து விசாரிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் ரயில்வே கூறியிருந்தது.

90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காணாமல் போனதா?
ரயில்வே வசதியே இல்லாத நாடுகள் குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com