யார் முதல்ல ஃபோட்டோ எடுப்பது? கலாட்டாவில் முடிந்த திருமணம் - எங்கே?

மணக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வந்திருந்த விருந்தாளிகள் விரைந்தனர். அப்போது யார் முதலில் அவர்களுடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்வது என்ற விவாதம் எழுந்ததாக தெரிகிறது.
திருமணம்
திருமணம்Twitter
Published on

பெண் வீட்டார் முதலில் ஃபோட்டோ எடுப்பதா அல்லது மாப்பிள்ளை வீட்டார் முதலில் ஃபோட்டோ எடுப்பதா என்று எழுந்த விவாதம் சண்டையாக மாறி, கலாட்டாவில் முடிந்துள்ளது இந்த திருமணம்.

திருமணம் என்றால் குதூகலத்துடன் கலகமும் சேர்ந்தே வரும். இந்த காரணத்துக்காகலாம் கல்யாணத்துல சண்ட போடுவாங்களா என்பது போல, உத்திர பிரதேசத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது

உத்திரபிரதேசம், டியோரியா மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி திருமணம் ஒன்று நடந்தது. அப்போது மணமகளும் மணமகனும் மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கான ‘வரமாலா’ நிகழ்வு நடந்தது.

இதன் பின்னர் மணக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வந்திருந்த விருந்தாளிகள் விரைந்தனர்.

அப்போது யார் முதலில் அவர்களுடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்வது என்ற விவாதம் எழுந்ததாக தெரிகிறது.

பெண் வீட்டார் நாங்கள் தான் முதலில் புகைப்படம் எடுத்துக்கொள்வோம் என்று ஒரு பக்கம் சண்டை கட்ட, இன்னொரு பக்கம் மாப்பிள்ளை வீட்டார் நாங்கள் தான் முதலில் ஃபோட்டோ எடுப்போம் என்று கேட்டுள்ளனர். விவாதம் சண்டையாக மாறியுள்ளது.

இந்த சண்டையின்போது மாப்பிள்ளை வீட்டார் மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

திருமணம்
மணமேடையில் முத்தம் கொடுத்த மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - எங்கே?

மாப்பிள்ளையின் உறவினர் ஒருவர் இடைமறிக்க முயன்ற போது அவரை அடித்துள்ளனர்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கைக்கலப்பில் மாப்பிள்ளையின் சகோதரியும் காயமடைந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ராம்பூர் கர்கானா காவல் துறையினர் விருந்தினர்களை சமாதானம் செய்து, காயம் ஏற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் கோபமடைந்த மணமகன், திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். பின்னர் அவர் மனம் மாறி திருமணம் செய்துகொண்டுள்ளார்.

திருமணம்
" Two Two Two" : இரட்டை சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட நபர் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com