"வந்தேன்டா பால்காரன்..." பால் விற்று 1 கோடி ரூபாய்க்கு வீடு கட்டிய ரியல் அண்ணாமலை!

தினமும் காலையில் அவரது பண்ணையின் முதல் மாடான லக்‌ஷிமியின் படத்தை வைத்து வழிபட்டு வருகிறாராம். இவரது செயல்களைப் பார்க்கும் போது "தொழில்பக்தியில நம்மள மிஞ்சின ஆளா இருக்கானே" என்று தான் சிந்திக்கத் தோன்றும். அப்படி என்னென்ன செய்தார்?
"வந்தேன்டா பால்காரன்..." பால் விற்று 1 கோடி ரூபாய்க்கு வீடு கட்டியவர் - ரியல் அண்ணாமலை!
"வந்தேன்டா பால்காரன்..." பால் விற்று 1 கோடி ரூபாய்க்கு வீடு கட்டியவர் - ரியல் அண்ணாமலை!Twitter
Published on

பள்ளியில் நாம் சரியாக படிக்கவில்லை என்றால் நம்மை "உனக்கு மாடு வாங்கி தரே மேய்ச்சுகிட்டு திரி" என வசைமொழி பொழிவர்.

மகாராஷ்டிராவில் ஒருவர் மாட்டில் பால் கறந்து ஒரு கோடி ரூபாய்க்கு வீடுகட்டியுள்ளார். சோலாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் இம்தே என்ற நபர் ஒரு மாட்டில் தொடங்கி இன்று 150 மாடுகளுக்கு மேல் வைத்து பண்ணை நடத்தி வருகிறார்.

இப்போது அவரது பண்ணையில் முதல் மாடான லக்‌ஷிமியின் படத்தை வைத்து வழிபட்டு வருகிறாராம். பாபு என்று அழைக்கப்படும் இவரது செயல்களைப் பார்க்கும் போது "தொழில்பக்தியில நம்மள மிஞ்சின ஆளா இருக்கானே" என்று தான் சிந்திக்கத் தோன்றும்.

அவர் புதிதாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டியுள்ள வீட்டின் மாடியில் பசுவின் சிலையை வைத்துள்ளார். பசு மட்டுமல்லாமல் பால் கொண்டு போகும் பாத்திரத்துக்கும் சிலை வைத்துள்ளார்.

அவரது வீட்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அண்ணாமலை படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ரஜினிகாந்த் போல மடமடவென வளர்ந்து வரும் இவரது கதையைப் பார்கலாம்.

1998ம் ஆண்டு பரம்பரை சொத்தான 4 ஏக்கர் வறண்ட நிலம் மட்டுமே இவரிடம் இருந்தது. விவசாயத்தைக் கைவிட்டு மாடு வளர்ப்பில் கால் வைத்தார் பிரகாஷ்.

"வந்தேன்டா பால்காரன்..." பால் விற்று 1 கோடி ரூபாய்க்கு வீடு கட்டியவர் - ரியல் அண்ணாமலை!
தன்னந்தனியாக கப்பல் வீடு கட்டும் விவசாயி - 13 ஆண்டு கால உழைப்பு எப்போது நிறைவடையும்?

1 மாட்டில் தொடங்கிய பண்ணையில் இப்போது 150 மாடுகள் இருக்கின்றன. பிரகாஷின் மொத்த குடும்பமும் தொழிலில் அவருக்கு உதவுகின்றனர்.

ஒவ்வொரு நாளும் 1000 லிட்டர் வரை அவர் பால் உற்பத்தி செய்கிறார். இவரது பண்ணை கிராமத்து மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது.

"வந்தேன்டா பால்காரன்..." பால் விற்று 1 கோடி ரூபாய்க்கு வீடு கட்டியவர் - ரியல் அண்ணாமலை!
20 வயதில் 25 லட்சம் வருமானம் : பண்ணை தொழிலில் பட்டைய கிளப்பும் கல்லூரி மாணவி

மேலும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இவரது பண்ணையை சுற்றிப்பார்க்கின்றனர். இப்போது மிகப் பெரிய தொழிலதிபராக வளர்ந்திருக்கும் பிரகாஷ் கோடீஸ்வரராக இருந்தாலும் அவரது தொழிலை மதிக்கும் வண்ணம் வீட்டு மாடியில் மாடு மற்றும் பால் டின் சிலை வைத்தது பலர் மத்தியில் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தருகிறது.

"வந்தேன்டா பால்காரன்..." பால் விற்று 1 கோடி ரூபாய்க்கு வீடு கட்டியவர் - ரியல் அண்ணாமலை!
LULU யூசுஃப் அலி : அரபு நாடுகளில் கொடிக்கட்டி பறக்கும் ஓர் இந்தியரின் வெற்றி கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com