டெல்லி செங்கோட்டையை பார்வையிட அனுமதி மறுப்பு - என்ன காரணம்?

வரலாற்று சிறப்பு மிக்க டெல்லி செங்கோட்டை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை
செங்கோட்டைCanva

விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்குவது தொடர்பாக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தொடர்ந்து முன்வைத்தனர். இது தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, டெல்லி நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் அமைப்பு கடந்த சிலநாட்களுக்கு முன்பு அறிவித்தனர்.

இதனையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய ஆலோசனையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

ஏற்கனவே விவசாயிகள் நடத்திய போராட்டம் கடும் விமர்சனத்தை சந்தித்த நிலையில் உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து விவசாயிகள் நேற்று டெல்லி நோக்கி பேரணியாக வந்தனர்.

இதனால் வரலாற்று சிறப்பு மிக்க டெல்லி செங்கோட்டை மூடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று விவசாயிகள் டெல்லியை நோக்கி டிரக்டர் அணிவகுப்பு நடத்திய நிலையில் தற்போது மீண்டும் டெல்லி நோக்கி படையெடுத்துள்ளனர். அவ்வாறு டெல்லி வரும் விவசாயிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

தற்போது டெல்லி செங்கோட்டை மூடப்படுள்ளதால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை
பத்மநாபசுவாமி கோவில் முதல் செங்கோட்டை வரை : இந்தியாவிலிருக்கும் ரகசிய சுரங்க பாதைகள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com