பத்மநாபசுவாமி கோவில் முதல் செங்கோட்டை வரை : இந்தியாவிலிருக்கும் ரகசிய சுரங்க பாதைகள்?

மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் எதிரிப் படைகள் தாக்கும் போது தப்பிக்க ஏதுவாக சுரங்கங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு சுரங்கத்தின் இரகசியமும் கடுமையாக காக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் உள்ள பழமையான சுரங்கங்கள் குறித்ததுதான் இந்த கட்டுரை.
பத்மநாபசுவாமி கோவில் முதல் செங்கோட்டை வரை : இந்தியாவிலிருக்கும் ரகசிய சுரங்க பாதைகள்?
பத்மநாபசுவாமி கோவில் முதல் செங்கோட்டை வரை : இந்தியாவிலிருக்கும் ரகசிய சுரங்க பாதைகள்?Twitter
Published on

இந்தியா மர்மங்களுக்கும் அதீத ஆர்வம் தரக் கூடிய இரகசியங்களுக்கும் புகழ் பெற்ற நாடு.

இங்கு பல கலாச்சாரங்கள், பண்பாடுகள், மதங்கள், பழக்கவழக்கங்கள் இருந்துள்ளன.

பல்வேறுபட்ட ராஜ குடும்பத்தினர் ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்து மறைந்துள்ளனர்.

இந்த மன்னர்கள் பற்றிய கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமளிக்கக் கூடியவை. மன்னர்களின் அரண்மனைகள், புதையல்கள் போலவே ரகசிய சுரங்கள் மேலும் நமக்கு தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கிறது.

மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் எதிரிப் படைகள் தாக்கும் போது தப்பிக்க ஏதுவாக சுரங்கங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு சுரங்கத்தின் இரகசியமும் கடுமையாக காக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் உள்ள பழமையான சுரங்கங்கள் குறித்ததுதான் இந்த கட்டுரை.

தேசிய நூலகம், கொல்கத்தா:

கொல்கத்தாவின் தேசிய நூலகம் 250 ஆண்டுகள் பழமையானது. இதனை பெங்கால் நவாப் 1760ம் ஆண்டு கட்டினார்.

2010ம் ஆண்டு இந்த கட்டடத்தில் ஒரு சுரங்கம் போன்ற அமைப்பு கண்டறியப்பட்டது. இது சுவர்களால் சூழப்பட்ட துளை போல நீண்டு சென்றது. ஆனால் இதற்கு எந்த திறப்பும் இல்லை.

இந்த சுரங்கமானது ஆங்கிலேயர்கள் செல்வத்தை சேர்த்துவைக்க அல்லது கைதிகளை துன்புறுத்த பயன்படுத்தியிருக்கலாம் என வரலாற்றறிஞர்கள் கணிக்கின்றனர்.

தி அகோம் எஸ்கேப்

அசாம் மாநிலத்தில் அகோம் கலகம் ஏற்பட்ட போது ரகசிய இராணுவ தளம் கட்டப்பட்டது. அதில் இரண்டு சுரங்கங்கள் இருந்தன.

ஒரு சுரங்கம் 3 கிலோமீட்டர் நீளமானது. டலாடல் கர் முதல் திக்கோ ஆறு வரையிலான பகுதிகளை இது இணைக்கிறது.

மற்றொரு சுரங்கம் 13 கிலோமீட்டர் நீளமானது. இது கர்கான் அரண்மனையுடன் இணைக்கிறது.

பத்மநாபசுவாமி கோவில்

கேரளாவில் உள்ள இந்த கோவில் தொல்லியல் அறிஞர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் பிடித்ததாக இருக்கிறது.

காரணம் இந்த கோவிலில் இருக்கும் பழமையான சிற்பங்களும் இதன் வியக்கவைக்கும் கட்டடக்கலையும் தான்.

2011ம் ஆண்டு திருவாங்கூர் அரச குடும்பத்தினர் கோவில் சொத்துக்களை தவறாக கையாளுவதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்றது. அதில் ஆறு ரகசிய பெட்டகங்களில் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் 18 அடி நீளமான வைர சங்கிலியும், எண்ணற்ற தங்க நாணயங்கள் அடங்கும்.

பத்மநாபசுவாமி கோவிலில் சிறிய சுரங்கம் இருக்கிறது.

பத்மநாபசுவாமி கோவில் முதல் செங்கோட்டை வரை : இந்தியாவிலிருக்கும் ரகசிய சுரங்க பாதைகள்?
காந்த மலை முதல் பறக்கும் கல் வரை: இந்தியாவில் இருக்கும் மர்ம விஷயங்கள் தெரியுமா?

சார்மினார், ஹைத்ராபாத்

ஹைத்ராபாத்தில் உள்ள சார்மினார் மற்றும் கோல்கொண்டா கோட்டைகள் சுரங்கங்களால் இணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

2015ம் ஆண்டு இரண்டு வளைவுப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை வைத்து இந்த சுரங்கம் 9 கி.மீ நீளமானதாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றனர்

பத்மநாபசுவாமி கோவில் முதல் செங்கோட்டை வரை : இந்தியாவிலிருக்கும் ரகசிய சுரங்க பாதைகள்?
மர்மமான முறையில் விரிவடையும் பிரபஞ்சம் - என்ன நடக்கிறது?

அம்பர் அரண்மனை

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அம்பர் பேலசில் உள்ள காற்று புகும் சுரங்கம் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

வெறும் 325 மீட்டர் மட்டுமே நீளமான இது ஜெய்கார் கோட்டையுடன் அம்பர் அரண்மனையை இணைக்கிறது.

2011ம் ஆண்டு இந்த சுரங்கப்பாதையை சுற்றுலாத் தளமாக அறிவித்தனர்.

செங்கோட்டை

17ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஷாஜஹான் கட்டியதுதான் செங்கோட்டை. இங்கிருந்து டெல்லி நாடாளுமன்றத்துக்கு 6 கி.மீ நீளமான சுரங்கம் இருக்கிறது.

2016ம் ஆண்டுதான் இந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

பத்மநாபசுவாமி கோவில் முதல் செங்கோட்டை வரை : இந்தியாவிலிருக்கும் ரகசிய சுரங்க பாதைகள்?
Coober Pedy: பாலைவன பூமிக்குள் பளபளக்கும் வினோத நகரம்- சுரங்கங்களில் வாழும் மக்களின் கதை!

முடிக்கப்படாத சுரங்கம்

2014ம் ஆண்டு இந்திய இராணுவ வீரர்கள் காஷ்மீரில் ஒரு சுரங்கப்பாதையைக் கண்டறிந்தனர். 20 அடி ஆளமான அது இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைபவர்களால் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

பத்மநாபசுவாமி கோவில் முதல் செங்கோட்டை வரை : இந்தியாவிலிருக்கும் ரகசிய சுரங்க பாதைகள்?
எலும்புகூடுகளின் ஏரி டு இரட்டையர் கிராமம் - இந்தியாவின் மர்ம இடங்களுக்கு செல்ல ரெடியா?

மும்பையில் 200 ஆண்டு பழமையான சுரங்கங்கள்

மும்பையில் உள்ள பொது தபால் நிலையத்தின் முற்றத்தில் 2010ம் ஆண்டு கற்களால் கட்டப்பட்ட பாதைக் கண்டறியப்பட்டது.

இது 200 ஆண்டுகள் பழமையானது எனக் கூறுகின்றனர்.

அங்கிருந்து 500 மீட்டர் இடைவெளியில் உள்ள புனித ஜார்ஜ் மருத்துவமனையில் இரண்டாவதாக ஒரு சுரங்கம் அமைந்துள்ளது. அது மூன்று கிளைகளாக பிரிந்து இந்தியா கேட், தி ப்ளூ கேட் மற்றும் புனித தாமஸ்கேதீட்ரல் ஆகிய இடங்களை அடைகிறது.

பத்மநாபசுவாமி கோவில் முதல் செங்கோட்டை வரை : இந்தியாவிலிருக்கும் ரகசிய சுரங்க பாதைகள்?
"இந்த கற்கள் தானாக நகர்கின்றன"- மரண பள்ளத்தாக்கு மர்ம பாறைகளின் அறிவியல் பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com