ஃபெனி முதல் தாட்டி கல்லு வரை: இந்திய பழங்குடிகள் தயாரிக்கும் மதுபானங்கள் பற்றி தெரியுமா?

முதலில் இதன் சுவை இனிப்பாக இருக்கும், பின்னர் புளிப்பாகவும் இறுதியில் கசப்பாகவும் மாறும். இது அதிக போதைத்தரக் கூடியது எனக் கூறப்படுகிறது. பழங்குடி மக்கள் மட்டுமே தங்கள் பாரம்பரிய முறைப்படி இன்றும் மதுபானம் உற்பத்தி செய்து வருகின்றனர்.
ஃபெனி முதல் தாட்டி கல்லு வரை: இந்திய பழங்குடிகள் தயாரிக்கும் மதுபானங்கள் பற்றி தெரியுமா?
ஃபெனி முதல் தாட்டி கல்லு வரை: இந்திய பழங்குடிகள் தயாரிக்கும் மதுபானங்கள் பற்றி தெரியுமா?Twitter
Published on

வரலாற்று பூர்வமாக மனிதர்கள் எப்போதும் மதுபானங்களுடன் பிணைப்பைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒவ்வொரு பானம் தோன்றியிருக்கிறது.

ஹரப்பா நாகரீகத்தில் மதிரா "Madira" எனும் பானமும் ரிக் வேதகாலத்தில் சோம ரசம் எனும் மதுவும் இருந்ததை நம்மால் அறியமுடிகிறது.

நம் முன்னோர் பருகிய மது வகைகளை அதேப்போல இப்போது நம்மால் பருக முடிவதில்லை. இன்று புழக்கத்தில் இருக்கும் மது வகைகள் பெரும்பாலும் நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகவே இருக்கின்றன.

இந்தியாவில் வாழும் பழங்குடி மக்கள் மட்டுமே தங்கள் பாரம்பரிய முறைப்படி இன்றும் மதுபானம் உற்பத்தி செய்து வருகின்றனர். அவற்றில் சில வகைகளைப் பார்க்கலாம்.


Apong
ApongTwitter

அபாங்

அரிசியை மூலமாக கொண்டு உருவாக்கப்படும் ஒரு வகை பீர் தான் அபாங். இதனை அசாம் மாநில மக்கள் தயாரித்து பருகுகின்றனர்.

இதனைத் தயாரிக்க பல நாட்கள் எடுத்துக்கொள்கின்றனர். 32 வகையான மூலிகைகளைப் பயன்படுத்துகின்றனர். வாழை இலை மூங்கிலுடன் கரித் துண்டுகளைப் பயன்படுத்தி புகை மணத்துடன் தயாரிக்கும் கருப்பு அபாங் புகழ்பெற்றது.

திருமணம் போன்ற கொண்டாட்டங்களில் அபாங் பருகுகின்றனர். அபாங் பருகுவது உற்சாகத்தை அளிக்கும் எனக் கூறப்படுகிறது.

ஹந்தியா

ஒரிசா, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இந்த வகை மதுபானத்தை தயாரிக்கின்றனர். இதுவும் அரிசி சாதத்தை மூலமாக பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுதான்.

பலவகை மூலிகைகள் சேர்க்கபட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக நொதிக்க வைக்கப்பட்டு இதனைப் பயன்படுத்துகின்றனர். கலாச்சார விழாக்களிலும் மத சடங்குகளிலும் இந்த பானத்துக்கு இடம் உண்டு.

ஒரு மாத காலம் நடைபெறும் மகர் சங்கராந்தி இந்த பானம் இல்லாமல் நிறைவடையாது. பழங்குடி கடவுளுக்கு படையலாகவும் இந்த பானம் வைக்கப்படுகிறது.

Lugdi
Lugdi

லுக்தி (Lugdi)

இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்படும் இந்த மதுவில், பலவகை தானியங்களை மிதமான சூட்டில் வறுத்து பயன்படுத்துகின்றனர்.

மற்ற மதுபானங்களைப் போல காய்ச்சி வடிகட்டாமலே இதனைப் பருகுகின்றனர். கோடைக்காலத்தில் நொதித்தல் என்பதும் மிகவும் விரைவாக நடந்துவிடுகிறது.

இதனை பக்குவப்படுத்தி வைத்து குளிர்காலத்திலும் பயன்படுத்துகின்றனர். குளிர்காலத்தில் மக்களை சூடாக வைத்திருக்க இந்த பானம் உதவுகிறது.

கின்னரா, லஹௌலா, ஸ்வாங்கியா, பங்வாலா மற்றும் ஷாட் ஆகிய பழங்குடிகளைச் சேர்ந்த மக்கள் இந்த பானங்களைத் தயாரிக்கின்றனர்.

தாட்டி கல்லு
தாட்டி கல்லு

தாட்டி கல்லு

கேரளாவில் உள்ள ஏரவள்ளன், அடியார்கள், இருளர்கள், காடர்கள் ஆகிய பழங்குடி மக்களால் பருகப்படும் பானம் இது. பனை மரங்களின் தண்டுகளில் இருந்து எடுக்கப்படும் சாறில் இருந்து பானம் தயாரிக்கப்படுகிறது.

முதலில் இதன் சுவை இனிப்பாக இருக்கும், பின்னர் புளிப்பாகவும் இறுதியில் கசப்பாகவும் மாறும். இது அதிக போதைத்தரக் கூடியது எனக் கூறப்படுகிறது.

ஃபெனி முதல் தாட்டி கல்லு வரை: இந்திய பழங்குடிகள் தயாரிக்கும் மதுபானங்கள் பற்றி தெரியுமா?
Apong: பீர் தயாரிக்கும் பெண்கள் - பழங்குடி மக்களின் வினோத மதுபானம் பற்றி தெரியுமா?

ஃபெனி

கோவாவில் உள்ள கவுடாக்கள் மற்றும் குன்பிஸ் ஆகிய பழங்குடியினர் முந்திரி பழங்களில் இருந்து ஃபெனி என்ற மதுவைத் தயாரிக்கின்றனர்.

ஃபெனி முதல் தாட்டி கல்லு வரை: இந்திய பழங்குடிகள் தயாரிக்கும் மதுபானங்கள் பற்றி தெரியுமா?
ஆணுறை மூலம் போதை ஏற்றும் இளைஞர்கள் - என்ன நடக்கிறது இங்கே?

இது உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப்பயணிகாளாலும் விரும்பி பருகப்படுகிறது. இரண்டு முறை காய்ச்சி வடிகட்டி இதனைத் தயாரிக்கின்றனர். இதில் 40% ஆல்கஹால் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஃபெனி முதல் தாட்டி கல்லு வரை: இந்திய பழங்குடிகள் தயாரிக்கும் மதுபானங்கள் பற்றி தெரியுமா?
மது அருந்துவதை 30 நாட்கள் நிறுத்துவது பலனளிக்குமா? நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com