விழாக்காலத்தை முன்னிட்டு ஃப்ளிப்கார்ட், அமேசான், மீஷோ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஆஃபர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. குறைந்த விலையில் உட்கார்ந்த இடத்திலிருந்தே பொருட்களை வாங்க முடிவதனால் மக்களும் ஆன்லைன் தளங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
ஆனால் அதிகப்படியாக குவிந்த ஆர்டர்களாலோ என்னவோ பலருக்கு ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு பொருள் வருவதாகவும், ஆர்டர் கேன்சல் செய்யப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.
பெரும்பாலும் மொபைல் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்கு செங்கல் போன்று எதாவது வரும். ஆனால் இங்கு ஒருவருக்கு ஃப்ளிப்கார்டின் தவறினால் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.
ஃப்ளிப்கார்டில் ஐபோன் 13 128 ஜிபி ஆர்டர் செய்தவருக்கு அதை விட விலை அதிகமான ஐபோன் 14 வந்தது. இதற்கு நெட்டிசன்கள் பலர் பலவிதமான ரியாக்ஷன்களை வழங்கியிருக்கின்றனர்.
ஐபோன் 14 அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 13 மாடலின் விலைக் குறைந்தது. இதனால் விற்பனையும் அதிகரித்தது. ஆனால் இந்த சம்பவத்தை குறிப்பிட்ட நெட்டிசன் ஒருவர், ஐபோன் 13 மற்றும் 14க்கு இடையில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லாததால் மாற்றி அனுப்பியிருப்பார்கள் என்று ஆப்பிள் நிறுவனத்தை நகைச்சுவையாக விமர்சித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களின் அட்ராசிட்டிகள் இணையத்தில் பெரிய அளவில் பேச்சுப் பொருளாக இருக்கிறது.
பிக் பில்லியன் டேஸ் போன்ற ஆஃபர்கள் முற்றிலுமான ஏமாற்று விஷயங்கள் என்ற கருத்தும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொருட்கள் தவறாக வந்தால் அவற்றை சரி செய்ய நிறுவனங்களை தொடர்பு கொள்ள முடியும். நாம் ஆர்டர் செய்ததை விட விலை அதிகமான பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டால் அதனை வைத்துக்கொள்வது வாரன்டி பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust