சாக்லேட் முதல் பால் வரை - நாய்களுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க!

நாய்களுக்கு ஒரு சில உணவு வகைகள் உடல்நலக் கோளாறை ஏற்படுத்தும். சில சமயம் உயிரே போகிற அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். எந்தெந்த உணவுகளை நாய்களுக்கு வழங்கக்கூடாது என்ற தொகுப்பு தான் இது
சாக்லேட் முதல் பால் வரை - நாய்களுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க!
சாக்லேட் முதல் பால் வரை - நாய்களுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க!canva
Published on

நாய் வளர்ப்பது குழந்தையை வளர்ப்பதை விட கடினம். உணவு, வெப்பநிலை, உரிய மருத்துவ பரிசோதனைகள் என எல்லாம் சரியாக பார்த்து பார்த்து செய்ய வேண்டும்.

நம் வீடுகளில் நாய் வளர்க்கும்போது நாம் சாப்பிடும் உணவையே அதற்கும் தருவோம். அம்மாக்கள் குழந்தைகளை சாப்பிட வைப்பது போல செல்லம் கொஞ்சி உணவு ஊட்டிவிடும் வீடியோக்களை நாம் நிறைய பார்த்திருப்போம்.

ஆனால் நாய்களுக்கு ஒரு சில உணவு வகைகள் உடல்நலக் கோளாறு ஏற்படுத்தும். சில சமயம் உயிரே போகிற அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

எந்தெந்த உணவுகளை நாய்களுக்கு வழங்கக்கூடாது என்ற தொகுப்பு தான் இது

திராட்சை மற்றும் உலர் திராட்சை

திராட்சை மற்றும் உலர் திராட்சைகள் சாப்பிட்டால், நாய்களுக்கு சிறுநீரகம் பாதிக்கப்படும். சிறிய அளவு சாப்பிட்டாலும் ஆபத்தை விளைவிக்கும் என கூறப்படுகிறது

சாக்லேட்

சாக்லேட்டை விரும்பாத மனிதர்கள் இல்லை. ஆனால் சாக்லேட்களில் உள்ள கஃபைன் மற்றும் தியோப்ரோமைன், நாய்களின் இருதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். குறிப்பாக டார்க் சாக்லேட் மற்றும் கோகோ பவுடர் அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.

அதே போல தான் காபி அல்லது டீயும். இவற்றிலும் கஃபைன் இருக்கிறது

சாக்லேட் முதல் பால் வரை - நாய்களுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க!
பூனை பிரியர்கள் எப்படி எல்லாம் இருப்பார்கள் தெரியுமா? ஆய்வு சொல்லும் 10 சுவாரஸ்யங்கள்

ஜைலிடால்

ஜைலிடால் சுகர் ஃப்ரீ பப்புள் கம்கள், மிட்டாய்கள் போன்றவற்றில் இருக்கும். இவற்றை நாய்கள் சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் வேகமாக வெளியேறும். சர்க்கரை அளவு குறைவதுடன், வலிப்பு தாக்கலாம், சில சமயம் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்

அவகாடோ

பட்டர் ஃப்ரூட் என்றும் அறியப்படும் இந்த பழவகையில், பெர்சின் என்ற பொருள் இருக்கிறது. இந்த பழத்தை நாய்கள் சாப்பிட்டால், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.

சாக்லேட் முதல் பால் வரை - நாய்களுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க!
நாய் வளர்ப்பு : நாம் அறிய வேண்டிய சில விஷயங்கள்

வெங்காயம் மற்றும் பூண்டு

நம் வீட்டின் அன்றாட சமையலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் காய்கறிகள் இந்த வெங்காயமும் பூண்டும். இது எந்த வகையில் சாப்பிட்டாலும், சமைத்தோ, பச்சையாகவோ, எப்படி சாப்பிட்டாலும் நாய்களின் சிகப்பு ரத்த செல்களை சேதப்படுத்தும். இதனால் ரத்த சோகை ஏற்படுகிறது

இதே போல சமைக்கப்படாத அசைவ உணவுகள், பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் ஆகியவையும் நாய்களின் உடல்நலத்திற்கு ஆபத்து

சாக்லேட் முதல் பால் வரை - நாய்களுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க!
பூனை வளர்ப்பவரா நீங்கள்? : பூனைகளுக்கு உணவளிப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 உண்மைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com