பூனை பிரியர்கள் எப்படி எல்லாம் இருப்பார்கள் தெரியுமா? ஆய்வு சொல்லும் 10 சுவாரஸ்யங்கள்

உலகெங்கிலும் 500 மில்லியன் பூனை பிரியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பூனை பிரியர்களைப் பற்றி பலருக்கும் தெரியாத 10 விஷயங்கள் இங்கே உள்ளன.
10 things you didn’t know about cat lovers
10 things you didn’t know about cat loversTwitter
Published on

பூனை உலகெங்கிலும் உள்ள பலருக்கு விருப்பமான செல்லப்பிராணியாக உள்ளது.

வெவ்வேறு இனங்களில் இருக்கும் இந்த பூனைகள் உலகில் செல்லப்பிராணிகளுக்கான தேர்வில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகெங்கிலும் 500 மில்லியன் பூனை பிரியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பூனை பிரியர்களைப் பற்றி பலருக்கும் தெரியாத 10 விஷயங்கள் இங்கே உள்ளன.

ஆர்வமாக இருப்பார்கள்

பூனைகள் இயற்கையாகவே ஆர்வமாக இருக்கும்.

உளவியலாளர் டெனிஸ் குவாஸ்டெல்லோவின் ஆய்வின்படி, பூனைகளின் உரிமையாளர்களும் அப்படித்தான் இருப்பார்களாம். ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்களே தவிர பூனைக்குட்டிகளைப் போல குறும்பு செய்ய மாட்டார்களாம்.

பூனைகளையே படிக்க விரும்புகின்றனர்

பூனைகளைப் பற்றிய புத்தகங்கள் மட்டுமல்ல, பூனைகளையே படிக்க விரும்புகின்றனர்.

சமீபத்தில் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நாய்களை நேசிப்பவர்களை விட பூனைகளை நேசிப்பவர்கள் கல்லூரி பட்டம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பூனைகளை விரும்புவர்கள், பொதுவாக உள்முகமாக ( introvert) இருப்பார்களாம். அதாவது ஒரு பொது இடத்திற்கு சென்றால் கூட மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பார்களாம்.

பல ஆய்வுகளில், நாய்களை நேசிப்பவர்களை விட பூனைகளை நேசிப்பவர்கள் இவ்வாறு இருப்பார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அன்பை பகிர்ந்துகொள்ளமாட்டார்கள்

பேராசிரியர் சாம் கோஸ்லிங்கின் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வின்படி,

பூனை உரிமையாளர்கள் தங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் அல்லது வீட்டில் ஒரே ஆளாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பூனை மீது இருக்கும் அன்பை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்களாம்.

தோழமை தேடுவது எளிது

மனித தோழமையைத் தேடுவது, ​​பூனைப் பிரியர்களுக்கு எளிதான ஒன்றாக இருக்கலாம்.

இரண்டு பிரெஞ்சு சமூக உளவியலாளர்கள் 2008 இல் மேற்கொண்ட ஒரு ஆய்வில்,

விலங்குகளை விரும்புபவர்கள் கூட்டாளிகளை தன்வசப்படுத்திகொள்ள மிகவும் பிரியமானவர்களாகக் காணப்படுகிறார்கள்.

சென்சிட்டிவ் பார்ட்னர்

பொதுவாக பூனையை நேசிப்பவர்கள் சென்சிட்டிவாக இருப்பார்களாம்.

ஆய்வின் முடிவில் பூனைப் பிரியர்கள் அடிப்படையாகவே உணர்ச்சிகரமான இயல்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.

இரக்கமுள்ள நண்பர்களாகவோ அல்லது காதலர்களாகவோ இருப்பார்களாம்.

10 things you didn’t know about cat lovers
பூனை குறுக்கிடுவது முதல் கண்ணாடி உடைவது வரை - கெட்ட சகுனங்களுக்கு பின்னிருக்கும் அறிவியல்!

குட் லிசனர்

பூனையை நேசிப்பவர்கள், நேர்மையாகவும் யாரையும் ஒரு ஜட்ஜ்மெண்டல் பார்வையில் பார்க்கமாட்டார்களாம்.

பிறர் சொல்வதை நன்றாக காதில் வாங்கிகொள்பவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய ஆய்வில், 41 சதவீதம் பேர் தங்கள் செல்லப்பிராணியால் நிம்மதியான தூக்கம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இயற்கை காதலர்கள்

பூனை உரிமையாளர்கள் இயற்கையை அதிகம் ரசிப்பார்கள். அவர்கள் காடுகளில் நடைபயணம் செய்து மகிழ்வார்கள் சூரிய அஸ்தமனத்தை ரசிப்பார்கள்.

பொதுவாகவே எல்லாம் இப்படி தானே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, மேல் சொல்ல விவரங்களை அடிப்படை குணமாக கொண்டவர்களாக இருப்பார்களாம்.

10 things you didn’t know about cat lovers
பூனை வளர்ப்பவரா நீங்கள்? : பூனைகளுக்கு உணவளிப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 உண்மைகள்

டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சாம் கோஸ்லிங் நடத்திய ஆய்வில், பூனைகள் மன அழுத்தத்தை குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்கள் வீட்டில் ஒரு பூனை இருந்தால் மாரடைப்பால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் குறைவு எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com