ஃபோர்ப்ஸ் 2023: இந்தியாவின் பணக்கார பட்டியலில் இடம்பிடித்த பெண் பில்லியனர்கள்- யார் யார்?

57.96 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஒன்பது பெண் கோடீஸ்வரர்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அவர்களில், ஜிண்டால் குழுமத்தின் நிறுவனர் சாவித்ரி ஜிண்டால் மட்டுமே $24 பில்லியன் நிகர மதிப்புடன் முதல் ஐந்து பணக்கார இந்தியர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.
Forbes India's 100 Richest 2023: Meet the Women Billionaires of India
Forbes India's 100 Richest 2023: Meet the Women Billionaires of IndiaTwitter
Published on

2023 ஆண்டுக்கான 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இது கடந்த ஆண்டை விட 4 பில்லியன் டாலர் அதிகம்.

57.96 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஒன்பது பெண் கோடீஸ்வரர்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

அவர்களில், ஜிண்டால் குழுமத்தின் நிறுவனர் சாவித்ரி ஜிண்டால் மட்டுமே $24 பில்லியன் நிகர மதிப்புடன் முதல் ஐந்து பணக்கார இந்தியர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானிTwitter

அடுத்ததாக 28வது இடத்தில் மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா உள்ளார். இவர்களின் நிகர மதிப்பு $24 பில்லியன் ஆகும். இவர் போர்ட்ஃபோலியோவில் டைட்டன், ஸ்டார் ஹெல்த், அதனுடன் இணைந்த காப்பீடு மற்றும் மெட்ரோ பிராண்டுகள் ஆகியவை அடங்கும்.

மின்சார உபகரண நிறுவனமான ஹேவெல்ஸ் இந்தியா லிமிட்டட் 30வது இடத்தைப் பிடித்துள்ளது. வினோத் ராய் குப்தா மற்றும் அவரது மகன் அனில் ராய் குப்தா இணைந்து நடத்தும் இந்த நிறுவனத்தின் மொத்த நிகர மதிப்பு $6.7 பில்லியன். இந்த நிறுவனம் தற்போது 60 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

Forbes India's 100 Richest 2023: Meet the Women Billionaires of India
கிரீன்லாந்தை வட்டமிடும் பில் கேட்ஸ், ஜெஃப் பிசோஸ் போன்ற உலக பணக்காரர்கள் - என்ன காரணம்?
பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா
பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா

லேண்ட்மார்க் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான ரேணுகா ஜக்தியானி 4.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் 44வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஹெல்த்கேர் நிறுவனமான யுஎஸ்வி இந்தியாவின் தலைவரான லீனா திவாரி 4.75 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 45வது இடத்தில் உள்ளார்.

Nykaa நிறுவனர் ஃபால்குனி நாயர். ஃபோர்ப்ஸ் படி, இந்த ஆண்டு அவரது நிகர மதிப்பு 35.05% குறைந்துள்ளது. அவரது நிகர மதிப்பு $4.08 பில்லியனில் இருந்து $2.65 பில்லியனாகக் குறைந்துள்ளது, மேலும் பட்டியலில் 44வது இடத்தில் உள்ளார்.

பயோகான் நிறுவனரான கிரண் மஜும்தார் ஷா 2.52 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 92வது இடத்தில் உள்ளார்.

Forbes India's 100 Richest 2023: Meet the Women Billionaires of India
ஹிண்டன்பெர்க் தாக்கம் : இப்போது இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com