கிரீன்லாந்தை வட்டமிடும் பில் கேட்ஸ், ஜெஃப் பிசோஸ் போன்ற உலக பணக்காரர்கள் - என்ன காரணம்?

பருவநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்தின் நிலப்பரப்பை மூடி இருந்த பனி அடுக்குகள் உருகத் தொடங்கிப் பல ஆண்டுகளாகிவிட்டன. பனி உருகும் வேகம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது.
Greenland
GreenlandTwitter

உலகின் ஆகப் பெரிய பணக்காரர்கள் பெரிய மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்குவர், பெரிய இ காமர்ஸ் வலைத்தளத்தை நிர்வகிப்பர், பெரிய ஷாப்பிங் மால், பிரமாண்டமான கட்டுமான திட்டங்கள் போன்றவற்றைத் தொடங்குவர். ஆனால் இங்கு சில உலக பணக்காரர்கள் ஒரு நாட்டில் சுரங்கம் தோண்டுவது தொடர்பான பணிகளைத் தொடங்கியுள்ளனர். அந்த சுரங்கப் பணிகள் பருவநிலை மாற்றத்தின் வேகத்தைக் குறைக்க உதவலாம் என்றும் கூறப்படுகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்தின் நிலப்பரப்பை மூடி இருந்த பனி அடுக்குகள் உருகத் தொடங்கிப் பல ஆண்டுகளாகிவிட்டன. பனி உருகும் வேகம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

கிரீன்லாந்தின் நிலப்பரப்புக்கு அடியில் கணிசமான அளவுக்குப் பல அரிய உலோகங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் இருக்கலாம் எனச் சுரங்க நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். குறிப்பாக அவை பசுமைப் புரட்சிக்கு உதவலாம், பருவநிலை மாற்றப் பிரச்சனைக்கு ஒரு தீர்வை வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்போது சில நிறுவனங்கள் அங்குச் சுரங்கம் தோண்டுவது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

பில் கேட்ஸ்
பில் கேட்ஸ்Twitter

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ், அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசோஸ், ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தலைவர் மைக்கெல் ப்ளூம்பெர்க் போன்றவர்கள் கொ-போல்ட் (KoBold) மெட்டல்ஸ் என்கிற நிறுவனத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர். இந்த சுரங்கப் பணிகள் மூலம் பல லட்சக் கணக்கிலான மின்சார வாகனங்களுக்குத் தேவையான முக்கிய உலோகங்கள் மற்றும் தாதுப் பொருட்களைத் தயாரிப்பது அவர்கள் நோக்கம்.

Greenland
The Legend சரவணன்: நடிகர்களாக மாறிய தொழிலதிபர்கள் - யார் யார் தெரியுமா?

உலகின் மிகப் பெரிய அல்லது இரண்டாவது மிகப் பெரிய நிக்கல் மற்றும் கோபால்ட் இருப்பைக் கண்டுபிடிக்க முயன்று வருகிறோம் என கொ-போல்ட் மெட்டல் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி குர்ட் ஹவுஸ் சி என் என் ஊடகத்திடம் கூறினார். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இந்நிறுவனம் ப்ளூஜே மைனிங் என்கிற நிறுவனத்தோடு இணைந்து கிரீன்லாந்து சுரங்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சுரங்கப் பணிகளின் தொடக்க கட்டமாக 30 பூகோளவியல் ஆய்வாளர்கள், பூகோள இயற்பியல் வல்லுநர்கள், பொறியாளர்கள் கிரீன்லாந்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஹெலிகாப்டர்கள், டிரான்ஸ்மிட்டர் வசதி கொண்ட ட்ரோன்களோடு ஆய்வு பெரிய அளவில் நடைபெற்று வருவதாக மணி கண்ட்ரோல் வலைத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாகச் செய்திகள் பிரசுரமாகியுள்ளன. இத்தனை தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி உலோகம் மற்றும் தாதுப் பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டு, எங்கிருந்து சுரங்கப் பணிகளைத் தொடங்கினால் சரியாக இருக்குமெனத் தேர்வு செய்து பணிகளைத் தொடங்க உள்ளனர். பெரும்பாலும் அடுத்த ஆண்டு கோடைக் காலத்துக்குள் சுரங்கப் பணிகள் தொடங்கப்படலாம் என மணி கண்ட்ரோல் வலைத்தளம் கூறுகிறது.

Greenland
பீகார் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு : கொட்டிக் கிடக்கும் லட்சம் கோடி மதிப்பிலான தங்கம்

உலகம் முழுக்க மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளில் நிக்கல், கோபால்ட் லித்தியம் போன்ற உலோகங்கள் மற்றும் தாது பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் கிரீன்லாந்தில் இந்த உலோகங்கள் கிடைத்தால் அது பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உதவலாம் என்று கூறப்படுகிறது. இந்த காரணத்தால் தான் பில் கேட்ஸ் போன்ற சூழலியல் ஆதரவாளர்களும் இத்திட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர். பருவநிலை மாற்றம் நம் தலையெழுத்தையே மாற்றிவிடும், எதைச் செய்வதாக இருந்தாலும் அதைக் கொஞ்சம் விரைந்து செய்தால் நல்லது.

Greenland
காலநிலை மாற்றம்: போர் இல்லாமல் இந்த புவி வாழ்க்கை அழியப் போகிறதா ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com