அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றப்படும் மஹுவா மொய்த்ரா!

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மஹ்வா மொய்த்ரா
மஹ்வா மொய்த்ராNewsSense

மக்களவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய அரசு எஸ்டேட் இயக்குநரகம் வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை கடந்த ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி வெளியிட்டது.

அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்ற மக்களவை மஹுவா மொய்த்ராவை டிசம்பர் 8ஆம் தேதி பதவி நீக்கம் செய்தது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ரா, அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யுமாறு எஸ்டேட் இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மஹ்வா மொய்த்ரா
அதானி : தனி ஒரு மனிதனின் வளர்ச்சி தான் இந்தியாவின் கௌரவமா? - வறுத்தெடுத்த மஹுவா மொய்த்ரா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com