அதானி : தனி ஒரு மனிதனின் வளர்ச்சி தான் இந்தியாவின் கௌரவமா? - வறுத்தெடுத்த மஹுவா மொய்த்ரா

ஒரு தனி மனிதனின் அதீத சொத்து மதிப்பு தான் இந்தியாவின் கௌரவமா? இல்லவே இல்லை. இந்தியாவின் கவுரவம் இந்திய நிறுவனங்களின் வலுவான கட்டமைப்புகளில் இருக்கிறது.
மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ராTwitter

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிப்ரவரி 7ஆம் தேதி, மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா பேசினார். வழக்கம் போல காட்டமான, காத்திரமான கருத்துக்களால் அவையே சூடுபிடித்தது.

அவர் பேசியவற்றில் இருந்து,

எல்லா உண்மைகளும் மூன்று நிலைகளை கடக்கும். முதலில் அந்த உண்மையை அனைவரும் ஏளனப்படுத்தி சிரிப்பர். அடுத்து அந்த உண்மையை மிக கடுமையாக எதிர்ப்பர். கடைசியாக அது நிதர்சனமான உண்மை என்று ஏற்றுக் கொள்வர்.

இன்று இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை எதைப் பேச வேண்டும் என்கிற பட்டியலை விட, எதைப் பேசக்கூடாது என்கிற பட்டியல் மிக நீளமாக இருக்கிறது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அவையில் நாம் சீனாவை குறித்துப் பேசக்கூடாது, பெகாசஸ் உளவு விவகாரத்தை குறித்து பேசத் தடை, பிபிசி ஆவணப்படம் குறித்து வாய் திறக்கக் கூடாது, மோர்பி பாலம் இடிந்து விழுந்தது மக்கள் இறந்து போனதைக் குறித்து பேசலாகாது, ரபேல் விமானங்கள் குறித்து பேச இது இடமல்ல… அவ்வளவு ஏன் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கூட இங்கு எதையும் சொல்லக்கூடாது.

இன்று நான் இந்தியாவிலேயே மிகவும் பிரபலமாக இருக்கும் நபரைக் குறித்துப் பேசப் போகிறேன். அவருடைய பெயர் ஆங்கிலத்தில் A என்கிற எழுத்தில் தொடங்கி I என்கிற எழுத்தில் நிறைவடையும். அவர் பெயர் அத்வானி அல்ல. இந்த உரையில் அவரை மிஸ்டர் ஏ என்று அழைக்கிறேன். அவருடைய நிறுவனத்தை ஏ கம்பெனி என்று அழைக்கிறேன்.

அதானி - பிரதமர் மோடி
அதானி - பிரதமர் மோடிTwitter

ஒரு முன்னாள் முதலீட்டு வங்கியாளர் என்கிற நிலையில், எல்லா கம்பெனிகளும் செழித்து வளர வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் இந்திய கம்பெனிகள் செழித்து வளர வேண்டுமே தவிர ஏமாற்றுக்காரர்கள் அல்ல.

அடிப்படைக் கட்டுமானத் துறையில் இருக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் 5 - 15% வருமானத்தை மட்டுமே ஈட்டும். அதுவும் எல்லா விஷயங்கள் சரியாக நடந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.

ஏ நிறுவன பங்குகள் வர்த்தகமாகும் விலை மதிப்பில், கூகுள், அமேசான் போன்ற உலகத் தர நிறுவனங்கள் கூட வர்த்தகமாவதில்லை. எப்படிப் பார்த்தாலும் பங்குச் சந்தை என்பது, நிறுவனங்களின் அடிப்படை விஷயங்களை (Fundamental) மூலமாகக் கொண்டது.

மஹுவா மொய்த்ரா
கனிமொழி : பாஜக அரசு இல்லாத மாநிலங்கள், ஆளுநரோடு போராடி வருகின்றன

ஒரு காலத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தியாவின் பல்வேறு சுத்திகரிப்பு ஆலைகளை கையகப்படுத்திக் கொண்டிருந்தபோது, அது இந்தியா மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகப் பார்க்கப்படவில்லை. மும்பை நகரத்திற்கு தேவையான மின்சார திட்டங்கள் தொடர்பாக கத்தாரிலிருந்து நிதி முதலீடுகள் பெறப்பட்ட போது அது இந்திய மீதான தாக்குதலாக பார்க்கப்படவில்லை

நாம் அனைவரும் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம். ஒரு தனி மனிதனின் அதீத சொத்து மதிப்பு தான் இந்தியாவின் கௌரவமா? இல்லவே இல்லை. இந்தியாவின் கவுரவம் இந்திய நிறுவனங்களின் வலுவான கட்டமைப்புகளில் இருக்கிறது. நான் வால் ஸ்ட்ரீட் ஷார்ட் செல்லர் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்குள் செல்ல விரும்பவில்லை. நான் இந்த அவையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் எழுப்பிய கேள்விகளுக்கு விடைகள் வேண்டும்.

பிரதமர் அவர்களே, அந்த மிஸ்டர் ஏ என்கிற மனிதர் உங்கள் தலையில் தொப்பி வைத்து விட்டார். இந்த மனிதர் உங்களோடு பயணித்திருக்கிறார். அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் பல நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து இருக்கிறார். இந்தியா என்றால் பிரதமர் என்றும், தான் (மிஸ்டர் ஏ) தான் பிரதமர் என்கிற பிம்பத்தை உருவாக்கியுள்ளார். அந்த ஏ நபர் தான் பிரதமரை இயக்கும் ரிமோட் என்பது போலவும் ஒரு பிம்பத்தை கட்டமைத்து இருக்கிறார்.

மஹுவா மொய்த்ரா
அதானி விவகாரம் : மோடியை துளைத்தெடுத்த கேள்விகள் - ராகுல் காந்தி உரை தமிழில்

மிஸ்டர் ஏவுக்குச் சொந்தமான போலி நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியான முகவரிகள், இயக்குநர்கள் இருக்கிறார்கள். அந்த நபரோடு தொடர்புடைய போலி நிறுவனங்கள் வழியாக இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் முதலீடுகள் வந்துச் சேர்ந்திருக்கின்றன.

2020ஆம் ஆண்டில் வெறும் 9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மிஸ்டர் ஏ அவர்களின் சொத்து மதிப்பு, கடந்த 2022 ஆம் ஆண்டில் 90 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

நிதியமைச்சகம் ஏ நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது, செபி அமைப்பில் மிஸ்டர் ஏ அவர்களின் சம்மந்தி (சிறில் ஷ்ராஃப்) கார்ப்பரேட் நிர்வாக (Corporate Governance) குழுவில் உறுப்பினராக இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

எல் ஐ சி, எஸ் பி ஐ, இதர அரசு வங்கிகள் போன்ற பல நிறுவனங்களிடமிருந்து, தான் விரும்பிய நேரத்தில் பணத்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் மிஸ்டர் ஏ.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா : யார் பப்பு? - பாரதிய ஜனதா கட்சியை துளைத்தெடுத்த மேற்கு வங்க எம்.பி

ஏற்கனவே எல் ஐ சி நிறுவனம் அதானி குழுமப் பங்குகளில் சுமார் 36,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ சுமார் 27,000 கோடி ரூபாயை இவரின் நிறுவனத்திற்கு கடனாக கொடுத்திருக்கிறது. இதற்கு மேலும் இந்த இரு நிறுவனங்களும் அதானி குழுமத்தின் fbo பங்கு வெளியிட்டில் ஆங்கர் முதலீட்டாளர்களாக இருந்தது ஏன்? என பல்வேறு விதிமீறல்கள் மற்றும் நிதி சார் சிக்கல்களை பட்டியலிட்டு பல காத்திரமான வாதங்களை முன் வைத்தார் மஹுவா மொய்த்ரா.

மஹுவா மொய்தா பேசுகிறார் என்றாலே அவையில் சலசலப்புகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் பஞ்சமில்லை என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த முறை அது சற்றே கூடுதலாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மஹுவா மொய்த்ரா
அதானி விவகாரம் : அதானி நிறுவன தவறுகளை முன்பே சுட்டிக்காட்டிய அதானி வாட்ச்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com