பெங்களூரு To மும்பை : அதிக பில்லியனர்களைக் கொண்ட இந்திய நகரங்கள் பற்றி தெரியுமா?

இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்களில் 81 பில்லியனர்கள் இந்த ஏழு இந்திய நகரங்களில் தான் உள்ளனர். எந்தெந்த நகரங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
From Bengaluru To Mumbai: Forbes Reveals Top Indian Cities With Most Number Of Billionaires
From Bengaluru To Mumbai: Forbes Reveals Top Indian Cities With Most Number Of Billionaires Twitter

2023 ஆண்டுக்கான 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டது. இந்தியாவில் அதிக பில்லியனர்கள் உள்ள நகரங்களின் பட்டியலையும் போர்ப்ஸ் இந்தியா சமீபத்தில் வெளியிட்டது.

இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்களில் 81 பில்லியனர்கள் இந்த ஏழு இந்திய நகரங்களில் உள்ளனர். எந்தெந்த நகரங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மும்பை

ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2023 இன் படி, நாட்டின் முதல் 100 பணக்காரர்களில் 33 பில்லியனர்கள் மும்பையில் உள்ளனர். இந்த நகரத்தில் தான் முகேஷ் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா, ராதாகிஷன் தமானி, திலீப் ஷாங்வி மற்றும் பஜாஜ் குடும்பம் போன்ற தொழில் அதிபர்கள் வசிக்கின்றனர்.

டெல்லி

20 பில்லியனர்கள் வசிக்கும் டெல்லி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தலைநகரம் டெல்லி பலவகைப்பட்ட வணிகங்களைக் கொண்ட நிறுவனங்களின் தாயகமாக உள்ளது.

சாவித்ரி ஜிண்டால், சுனில் மிட்டல், ஷிவ் நாடார் மற்றும் குஷால் பால் சிங் போன்ற செல்வாக்கு மிக்க வணிகர்கள் இங்கு உள்ளனர்.

பெங்களூரு

முதல் 100 பில்லியனர்களில் 10 பேருடன் பெங்களூரு மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும், பெங்களூருவில் அசிம் பிரேம்ஜி, என்ஆர் நாராயண மூர்த்தி மற்றும் நந்தன் நிலேகனி போன்ற பெரும்பாலான கோடீஸ்வரர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

அகமதாபாத்

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, அகமதாபாத்தில் ஏழு பில்லியனர்கள் உள்ளனர். இந்த நகரம் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இங்கு கௌதம் அதானி, ஹஸ்முக் சுட்கர், கர்சன்பாய் படேல் மற்றும் பங்கஜ் படேல் போன்ற கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

From Bengaluru To Mumbai: Forbes Reveals Top Indian Cities With Most Number Of Billionaires
சென்னையை விட 3 மடங்கு அதிக மக்கள் வாழும் நகரம் எது? உலகளவில் டாப் 10 லிஸ்ட் இதோ!
Hyderabad
Hyderabad

புனே மற்றும் ஹைதராபாத்

புனே மற்றும் ஹைதராபாத் நகரங்களில் தலா நான்கு பில்லியனர்கள் உள்ளனர். மொத்தம் 8 பேரில் நான்கு பேர் ஹெல்த் கேர் நிறுவனங்களின் தலைவர்கள், இருவர் கட்டுமானத் தொழில்கள், இருவர் வாகன நிறுவனங்களின் தலைவர்கள். புனே மற்றும் ஹைதராபாத்தில் உள்ள முக்கிய கோடீஸ்வரர்கள் சைரஸ் பூனாவாலா, பாபா கல்யாணி மற்றும் முரளி திவி.

கொல்கத்தா

கொல்கத்தாவில் மூன்று பில்லியனர்கள் உள்ளனர். இதை தவிர மற்ற முக்கிய பில்லியனர்கள் லண்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ளனர். இந்துஜா குடும்பம் மற்றும் லட்சுமி மிட்டல் லண்டனில் வசிக்கின்றனர். ரேணுகா ஜக்தியானி மற்றும் ரவி பிள்ளை துபாயில் வசிக்கின்றனர்.

From Bengaluru To Mumbai: Forbes Reveals Top Indian Cities With Most Number Of Billionaires
Maldives: 20,000 மக்கள், 7000 கட்டிடங்கள்; மாலத்தீவில் உருவாகும் மிதக்கும் நகரம் - எதற்கு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com