Maldives: 20,000 மக்கள், 7000 கட்டிடங்கள்; மாலத்தீவில் உருவாகும் மிதக்கும் நகரம் - எதற்கு?

மாறிவரும் காலநிலை சூழல், கடல் மட்டம் உயரச் செய்து, இந்த தீவின் குறிப்பிடத்தக்க பகுதியை நீரில் மூழ்கச் செய்யும் என்றும், 2100ஆம் ஆண்டுக்குள் இந்த நகரமே இருக்காது என்றும் மதிப்பிடுகின்றனர்
Maldives: 20,000 மக்கள், 7000 கட்டிடங்கள்; மாலத்தீவில் உருவாகும் மிதக்கும் நகரம் - எதற்கு?
Maldives: 20,000 மக்கள், 7000 கட்டிடங்கள்; மாலத்தீவில் உருவாகும் மிதக்கும் நகரம் - எதற்கு?ட்விட்டர்
Published on

மாலத்தீவில் மிதக்கும் நகரம் ஒன்று உருவாகி வருகிறது. காலநிலை மாற்றத்தால் இத்தீவுக் கூடத்திற்கு ஏற்படவுள்ள சேதத்தில் இருந்து தப்பிக்க இந்த மிதக்கும் நகரத்தை உருவாக்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசு முன்வைத்திருக்கிறது

இலங்கைக்கு தென் மேற்கு பகுதியில், இந்திய பெருங்கடலில் சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் தீவுக்கூடம் தான் மாலத்தீவு. உலகளவில் அதிகமாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடுகளில் ஒன்றான இது, ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது பெரும் அழிவை சந்தித்திருக்கிறது, இன்னும் ஆபத்தின் விளிம்பில் தத்தளித்துக்கொண்டு தான் இருக்கிறது.

மேலும் மாறிவரும் காலநிலை சூழல், கடல் மட்டம் உயரச் செய்து, இந்த தீவின் குறிப்பிடத்தக்க பகுதியை நீரில் மூழ்கச் செய்யும் என்றும், 2100ஆம் ஆண்டுக்குள் இந்த நகரமே இருக்காது என்றும் மதிப்பிடுகின்றனர்

இந்த நாட்டின் 80 சதவீதம் தாழ்வான பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த தீவுக்கூடத்தில் சுமார் 2,100 தீவுகள் உள்ளன. இதுவே உலகின் மிகவும் தாழ்வான பகுதியாக கருதப்படுகிறது. இந்த தீவினுடைய உயரமான நிலப்பரப்பே தண்ணீர் மட்டத்தில் இருந்து 3.3 அடி உயரத்தில் இருக்கிறது

இந்த பேரழிவில் இருந்து தப்பிக்க, ஒரு மிதக்கும் நகரத்தை உருவாக்க அந்த நாட்டின் அரசு அதிகாரிகள் திட்டமிட்டிருக்கின்றனர். அந்த திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. 2024ஆம் ஆண்டுக்குள் இந்த நகரத்திற்கு மக்கள் குடிப்பெயர தொடங்குவார்கள், 2027ஆம் ஆண்டு வாக்கில் இந்த நகரம் உருவாகியிருக்கும்.

Maldives: 20,000 மக்கள், 7000 கட்டிடங்கள்; மாலத்தீவில் உருவாகும் மிதக்கும் நகரம் - எதற்கு?
சுவிட்சர்லாந்து முதல் மாலத்தீவு வரை : உலகிலேயே அழகான நிலப்பரப்பு எங்கிருக்கிறது?

மாலத்தீவின் தலைநகரான மாலேவில் இருந்து சுமார் 10 நிமிட தூரத்தில் இந்த மிதக்கும் நகரம் உருவாகிறது. இங்கு 7,000 மிதக்கும் கட்டிடங்கள் இருக்கும் எனவும், 20,000 மக்கள் வாழ வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள், உணவகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என அத்தியாவசிய தேவைகளுக்கான கட்டிடங்கள் அனைத்தும் இங்கு நிறுவப்படும்.

மேலும், கடல் அலைகள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து மின்சக்தி தயாரிக்கப்படும். பருகுதல் மற்றும் இதர தேவைகளுக்கு கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படும். சைக்கிள், மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

இந்த ப்ராஜெக்ட்டை எடுத்து நடத்தும் டச்சு டாக்லாண்ட்ஸ் நிறுவனம், இது குறித்த மாதிரி வீடியோவை தங்களது சேனலில் வெளியிட்டும் இருக்கிறது

Maldives: 20,000 மக்கள், 7000 கட்டிடங்கள்; மாலத்தீவில் உருவாகும் மிதக்கும் நகரம் - எதற்கு?
மாலத்தீவு TO சாலமன் - அடுத்த 50 ஆண்டுகளில் கடலில் மூழ்க இருக்கும் தீவுகள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com