கோலி To தோனி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் வைத்திருக்கும் ஆடம்பர வீடுகள் - மதிப்பு தெரியுமா?

விளையாடுவதன் மூலம் மட்டும் அவர்கள் சம்பாதிக்கவில்லை மாறாக பல்வேறு விளம்பரங்களின் மூலமாகவும் பணம் சம்பாதிக்கின்றனர். எம்எஸ் தோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் என பல கிரிக்கெட் வீரர்கள் விலையுயர்ந்த வீடுகளைக் கொண்டுள்ளனர். அந்த வீடுகளின் மதிப்பு குறித்து இங்கே காணலாம்.
From Virat Kohli to MS Dhoni: Luxurious Homes of Indian Cricketers
From Virat Kohli to MS Dhoni: Luxurious Homes of Indian CricketersTwitter

கிரிக்கெட் உலக விளையாட்டாக மாறிவிட்டது. கிரிக்கெட் விளையாட்டுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி தற்போது உலகளவில் அதிக அங்கீகாரம் பெற்றுள்ளது.

அது மட்டுமில்லாமல் கிரிக்கெட் வணிக ரீதியாகவும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. போட்டிகளுக்கு அதிக ஸ்பான்சர்ஷிப்கள் வழங்கப்படுகின்றன. மக்கள் கிரிக்கெட் வீரர்களை பிரபலங்களாக கருதுகின்றனர்.

விளையாடுவதன் மூலம் மட்டும் அவர்கள் சம்பாதிக்கவில்லை மாறாக பல்வேறு விளம்பரங்களின் மூலமாகவும் பணம் சம்பாதிக்கின்றனர். பல கிரிக்கெட் வீரர்களின் நிகர மதிப்பு மில்லியன் டாலர்கள். எம்எஸ் தோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் என பல கிரிக்கெட் வீரர்கள் விலையுயர்ந்த வீடுகளைக் கொண்டுள்ளனர். அந்த வீடுகளின் மதிப்பு குறித்து இங்கே காணலாம்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களிலும், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கோலியின் ஆடம்பர மாளிகை முதலிடத்தில் உள்ளது. கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா 10,000 சதுர அடியில் உள்ள பிரமாண்டமான பங்களாவை வைத்துள்ளனர். அதன் தற்போதைய விலை ரூ.80 கோடி என்று கூறப்படுகிறது.

இந்த மாளிகையில் பளிங்கு தரையமைப்பு உள்ளது. அதே சமயம் வீட்டின் உட்புறம் பெரும்பாலும் கண்ணாடியால் ஆனது. பங்களாவிற்குள் நீச்சல் குளம், பார், உடற்பயிற்சி கூடம் என பல வசதிகள் உள்ளன. விராட் கோலி 2016 இல் தனது மும்பை வீட்டிற்கு மாறுவதற்கு முன்பு தனது குடும்பத்துடன் இந்த மாளிகையில் வசித்து வந்தார்.

கோலிக்கு அடுத்தபடியாக, யுவராஜ் சிங் உள்ளார். இவர் மும்பையில் பீச்சை பார்த்தப்படியான பங்களாவை வைத்திருக்கிறார். இதன் மதிப்பு சுமார் 65 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஓம்கார் டவர்ஸ் 1973 இன் 29வது மட்டத்தில் இந்த பிளாட் அமைந்துள்ளது. அதே கட்டிடத்தில் விராட் கோலியும் ஒரு சொத்து வைத்துள்ளார். அறைகளின் பால்கனியில் இருந்து, அரபிக்கடலின் அற்புதமான காட்சிகளைக் காணலாம்.

From Virat Kohli to MS Dhoni: Luxurious Homes of Indian Cricketers
பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய மூன்று இந்திய வீரர்கள் - ஒரு சுவாரஸ்ய கிரிக்கெட் வரலாறு!

அடுத்ததாக, மும்பையின் பாந்த்ரா பகுதியில் 35 கோடி ரூபாய் மதிப்பிலான மாளிகையை வைத்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். ஐந்து மாடி கட்டிடம் மூன்று தளங்கள், இரண்டு அடித்தளங்கள் மற்றும் ஒரு மொட்டை மாடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விசாலமான அறைகளில் கிரீம் நிற பளிங்கு தரை உள்ளது.

உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் எம்எஸ் தோனி இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளார். தோனி தற்போது ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவாவுடன் வசித்து வருகிறார். கைலாசபதி என்று அழைக்கப்படும் இதன் மதிப்பு 6 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

From Virat Kohli to MS Dhoni: Luxurious Homes of Indian Cricketers
கிரிக்கெட் : ராபின் சிங் டு நடராஜன்; இந்திய அணியில் இடம் பிடித்த 10 சிறந்த தமிழக வீரர்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com