விநாயகர் சதுர்த்தி : ரஜினி, ராம் சரண் லுக்கில் விநாயகர் - இணையத்தை கவரும் சிலைகள்

டிரெண்டில் இருந்த இந்த லுக்கை மையமாகக் கொண்டு, நாளை கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு விநாயகர் சிலைகளை வடிவமைத்து வருகின்றனர்.
விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்டிவிட்டர்
Published on

நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் ராம் சரணின் வேடம், மற்றும் ஜெயிலர் படத்தில் வரும் ரஜினிகாந்தின் லுக்கில் விநாயகர் சிலைகளை வடிவமைத்துள்ளனர் சிலை வடிவமைப்பாளர்கள். இது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது


இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. இந்தியா முழுவதும், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இத்திரைப்படம், இதுவரை இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களில் விலையுயர்ந்த திரைப்படமாகும்.

விநாயகர் சிலைகள்
Amitabh Bachchan: ரூ. 60 லட்சம் செலவில் நடிகருக்கு வீட்டில் சிலை வைத்த ரசிகர்

பிரம்மாண்டமாகப் படமாக்குவதில் இயக்குநர் சங்கருக்கு நிகராக ராஜமௌலியும் பார்க்கப்படுகிறார். ராம் சரண், என்டிஆர் ஆகியோரின் சிறப்பான நடிப்பு, மற்றும் ராஜமௌலியின் திரைக்கதை காரணமாக ஆர்ஆர்ஆர் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

ஆர்ஆர்ஆர், ராஜமௌலியின் முந்தைய திரைப்படமான பாகுபலி 2 வை விட அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நிறைய ஷாட்டுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

படத்தில் ராம் சரண் ராமரின் வேடத்தில் இருப்பது போன்று ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். பல தரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த காட்சிக்கு தனி ஃபேன்பேஸ் குவிந்தது. டிரெண்டில் இருந்த இந்த லுக்கை மையமாகக் கொண்டு, நாளை கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு விநாயகர் சிலைகளை வடிவமைத்து வருகின்றனர்.

இதன் புகைப்படங்களை நடிகர் ராம் சரணின் ரசிகர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். சிக்ஸ் பேக், வில் அம்பு ஆகியவற்றுடன் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், பாகுபலி படத்தில் பிரபாஸின் சில காட்சிகளை அடித்தளமாகக் கொண்டு, பாகுபலி பிள்ளையார்களை விநாயகர் சதுர்த்திக்கு வடிவமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆசனத்தில் பிரபாஸ் அமர்ந்திருப்பது, சிவலிங்கத்தை தோளில் வைத்து தூக்கிச் செல்வது, போர்களத்தில் நின்றுகொண்டிருப்பது, தேரை இழுத்துச் செல்வது போன்ற வடிவங்களில் விநாயகர் சிலைகள் மக்களை கவர்ந்திருந்தது.

இதேபோல சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் ரஜினிகாந்த் லுக்கிலும் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலை செய்யும் சிறுவன் - ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com