மத்திய பிரதேசம் மாநிலம், விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மனித முகத்துடன் ஆட்டுக்குட்டி பிறந்ததால் உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த ஆட்டுக்குட்டியின் முகம் எல்லாம் ரோமங்கள் இருந்தாலும் இதன் கண்கள் அமைந்துள்ள விதம் மனித முகத்துடன் இருப்பதாக காட்டுகிறது. இதன் கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் மனிதர்களுக்கு இருப்பது போலவே இருக்கிறது. இந்த மாதிரியான குழிக் கண்களுடைய முக அமைப்புக்கு ஆந்திரோமோர்பிக் (anthropomorphic facial structure) என்று பெயர்.
நவம்பர் 11ம் தேதி பிறந்த இந்த அதிசய ஆட்டுக்குட்டியின் பின்னிருக்கு அறிவியல் என்ன என்பதைப் பார்க்கலாம்.
மருத்துவ ரீதியில் இதற்கு தலை டிஸ்பெஸியா என்று பெயர். இது மிகவும் அரியதாக ஏற்படக்கூடிய நிகழ்வாகும். 50,000 விலங்குகளில் ஒன்றுக்கு தான் இப்படி மனித முகம் அமைய வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் ஆடுகளில் தான் இதுப் போல நடக்கிறது.
இதற்கு மூளையில் அதிகப்படியான திரவம் சுரப்பதால் ஏற்படும் வீக்கம் தான் காரணம் என்கிறார்கள். இப்படி தலையில் நடக்கும் நிகழ்வுக்கு ஹைட்ரோசெபாலஸ் (hydrocephalus) என்று பெயர்.
தாய் ஆடு கர்ப்பமாக இருக்கும் போது அதற்கு வைட்டமின் ஏ குறைபாடு இருந்திருக்கலாம் அல்லது ஏதாவது தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
இந்த ஆடுகளின் தோற்றம் விகாரமான மனித முகத்துடன் இருப்பதால் கிராம மக்கள் இதனைக் கண்டு அச்சமடைகின்றனர். 2020ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தின் நிமோடியா என்ற கிராமத்தில் பிறந்த ஒரு ஆட்டுக்குட்டியை மக்கள் வணங்கியது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust